- Advertisement -
Homeபொழுதுபோக்குமார்க் ஆண்டனியின் ஒட்டுமொத்த திரைக்கதைக்கும் பேட்ச் ஒர்க் போட்ட எஸ் ஜே சூர்யா... டப்பிங்ற்கு மட்டும்...

மார்க் ஆண்டனியின் ஒட்டுமொத்த திரைக்கதைக்கும் பேட்ச் ஒர்க் போட்ட எஸ் ஜே சூர்யா… டப்பிங்ற்கு மட்டும் எத்தனை நாட்கள் எடுத்துக் கொண்டார் தெரியுமா?

- Advertisement -

சண்டக்கோழி 2, அயோக்யா, ஆக்சன், சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி என அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்த விஷாலிற்கு, கம் பேக் திரைப்படமாக மார்க் ஆண்டனி அமைந்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, செல்வராகவன், ரித்து வர்மா, அபிநயா, ரெடின் கிங்ஸ்லி, சென்றாயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

திரிஷா இல்லனா நயன்தாரா என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிய ஆதிக்க ரவிச்சந்திரன், முதல் திரைப்படத்திலேயே சர்ச்சைக்குள்ளான இயக்குனர்கள் பட்டியலில் இணைந்தார். தொடர்ந்து அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்னும் திரைப்படத்தைக் கொடுத்து படுதோல்வியை அவர் சந்தித்தார்.

- Advertisement -

தொடர்ந்து பிரபுதேவாவை வைத்து பகிரா என்னும் திரைப்படத்தை இயக்கி, ரசிகர்களை சோர்வாக்கினார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த நேரத்தில்தான், அவருக்கு சரியாக டைம் டிராவல் கான்செப்ட் கிடைக்க அதை வைத்து மார்க் ஆண்டனியை உருவாக்கி இருக்கிறார்.

இந்தப் படத்தில் ஆண்டனி, மார்க் என்னும் இரண்டு கதாபாத்திரங்களில் தந்தை மகனாக விஷால் நடித்துள்ளார். இதே போல் ஜாக்கி பாண்டியன் இன்னும் கதாபாத்திரத்தில் திரையரங்குகளை அலற விட்டிருக்கிறார் எஸ் ஜே சூர்யா. ஒவ்வொரு காட்சியிலும் எஸ் ஜே சூர்யா அதகளம் செய்வது ரசிக்கும் வகையில் இருப்பதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

மார்க் ஆண்டனி டைட்டில் கார்டில் எஸ் ஜே சூர்யாவின் பெயருக்கு முன்னால் நடிப்பு அரக்கன் என வைத்தது மிகச் சரியாக உள்ளது என்றும் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். அவரின் பாடி லாங்குவேஜ், டயலாக்கில் காட்டிய ஏற்ற இறக்கம், காமெடியுடன் கூடிய வில்லத்தனம் என ஒவ்வொரு இடங்களிலும் ரசிக்க வைத்து திரைப்படத்தை சுவாரசியப்படுத்தி இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

இந்த திரைப்படம் குறித்து பேசியுள்ள எஸ் ஜே சூர்யா, “படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்திருக்கிறேன். ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் ஆதிக் அதற்கான கதையை எழுதுவார் என நம்புகிறேன். திரையரங்குகளில் ரசிக்கும் வகையில் மார்க் ஆண்டனி திரைப்படம் உள்ளது. இந்தப் படத்திற்காக நான் 25 நாட்கள் டப்பிங் கொடுத்தேன். அதிலும் தொடர்ந்து 22 மணி நேரம் டப்பிங் செய்தேன்” என்று பேசியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்