நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படம் தோல்விக்கு பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. நீண்ட இடைவேளைக்குப் பின் இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். மேலும், தமன்னா, வசந்த் ரவி, யோகி பாபு, மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடாவிலிருந்து சிவராஜ்குமார், தெலுங்கு நடிகர் சுனில், ஹிந்தியிலிருந்து ஜாக்கி ஷெராஃப் என பெரும் நட்சத்திர பட்டாளமே ஜெலிலர் படத்தில் உள்ளது.
இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியான நிலையில், நேற்று படத்தின் ஆடியோ லாஞ்ச் நடந்தது. இதில் பலரும் கலந்துகொண்டு ஜெயிலர் படம் குறித்தும், சூப்பர்ஸ்டார் ரஜினி குறித்தும் பேசினர்.
ஆனால், நடிகர் விடிவி கணேஷ் மட்டும் தளபதி விஜய் குறித்து மேடையிலேயே பேசினார். அவர் பேசுகையில், ஜெயிலர் படத்தில் நான் சின்ன கேரக்டரில்தான் வருகிறேன். ஷூட்டிங்கின் முதல் இரண்டு நாள் தலைவர் வரமாட்டார் என நெல்சன் சொல்லிவிட்டார். அதன்பின்னரே தலைவர் வந்தார்.
அவரை செட்டில் பார்ப்பதே ஒரு கெத்துதான். ஷூட்டிங் ஸ்பாட்டில் மிக எளிமையாக இருந்தார். மழை, வெயில் வந்தாலும் அவர் கேரவனுக்கே போகவில்லை. தளபதி விஜய்க்கு அப்புறம் டைமிங் மற்றும் சின்சியாரிட்டியை கடைபிடிக்கும் ஒழுக்கத்தை தலைவரிடம் மட்டுமே பார்த்தேன் என்றார். அதே போல, நீங்கள் நடிக்கும்போது நான் பார்க்கமாட்டேன். உங்களை பார்த்தாலே எனக்கு சிரிப்பு வருகிறது. அதனால் எனக்கு டேக் அதிகமாகிறது என்று என்னிடம் கூறினார் தலைவர் என்று பேசினார் விடிவி கணேஷ்.
ரஜினி – விஜய் ரசிகர்கள் இடையே சூப்பர்ஸ்டார் யார் என்ற போட்டி நிலவி வரும் நிலையில், ரஜினி விழா மேடையில், விஜய்யை குறிப்பிட்டு பேசிய விடிவி கணேஷின் பேச்சு வைரலாகிவருகிறது.





