- Advertisement -
Homeபொழுதுபோக்குசூர்யா பிறந்த நாளில் நாளை வெளியாகும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படப் பாடல் - இந்த...

சூர்யா பிறந்த நாளில் நாளை வெளியாகும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படப் பாடல் – இந்த பாடலை பாடியது எழுதியது யார் தெரியுமா? – வேற லெவல் சீக்ரெட்டா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் நல்ல பாடகர்களாக இருந்திருக்கின்றனர். அந்த வரிசையில் நடிகர்கள் கமல்ஹாசன் விஜய் வடிவேலு போன்றவர்கள் ஏராளமான பாடல்களை அவர்களது சொந்த குரலில் பாடி இருக்கின்றனர். மன்னன் படத்தில் நடிகர் ரஜினிகாந்தும் அடிக்குது குளிரு என்ற பாடலை சொந்த குரலில் பாடி ரசிகர்களை மிரட்டி இருந்தார்.

ஆனால் அதற்குப் பிறகு ஏனோ ரஜினிகாந்த் ஒரு பாடல் கூட அவரது சொந்த குரலில் பாடவில்லை. அதே நேரத்தில் கமல் விஜய் வடிவேலு போன்றவர்கள் பல பாடல்களை சொந்த குரலில் பாடி ரசிகர்களை மிகவும் ரசிக்க செய்திருக்கின்றனர். அந்த வரிசையில் இப்போது நடிகர் சூர்யாவும் இணைந்திருக்கிறார்.

- Advertisement -

நடிகர் சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்ற படத்திற்காக தனது சொந்த குரலில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அந்த பாடல்தான் நாளை அவரது பிறந்த நாளில் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆக ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

மேலும் இந்த பாடலை எழுதியவர் வளர்ந்து வரும் இளம் நடிகர் கென் கருணாஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் படத்தைத் தொடர்ந்து இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ராஜன் வகையறா என் படத்தில் நடித்து வருகிறார். அவரது பாடல் எழுதும் திறமையை அடையாளம் கண்ட நிலையில் நடிகர் சூர்யாவின் சொந்தக் குரலில் உருவான பாடலுக்கான வரிகளை நடிகர் கென் கருணாஸ் எழுதியிருக்கிறார்.

- Advertisement -

இன்றைய ஜென்ஸிகளின் அடையாளமாக ஜீவி பிரகாஷ் குமார் கென் கருணாஸ் கூட்டணியில் நடிகர் சூர்யா காம்போவில் உருவான ஒரு புதிய பாடல் நாளை வெளியாக உள்ளது. பல நடிகர்கள் தங்களது சொந்தக் குரலில் பாடி இருந்தாலும் சிலரால் மட்டுமே அதில் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற முடிந்தது.

அந்த வரிசையில் நடிகர் சூர்யாவும் முதல் முறையாக தனது சொந்த குரலில் ஒரு பாடலை முழுமையாக பாடியிருக்கிறார். ஏற்கனவே அஞ்சான் உள்ளிட்ட சில படங்களில் சூர்யா சில வரிகள் மட்டுமே பாடிய நிலையில் தற்போது முழு பாடலையும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துக்காக பாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்