- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது... சூப்பர் ஸ்டாருக்கு இது வரவே வராதா... குண்டை தூக்கி போட்ட மகள் சௌந்தர்யா... தமிழ்நாட்டில்...

என்னது… சூப்பர் ஸ்டாருக்கு இது வரவே வராதா… குண்டை தூக்கி போட்ட மகள் சௌந்தர்யா… தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இப்படி இருக்கலாமா என ரசிகர்கள் அதிருப்தி…

- Advertisement -

கோலிவுட் முதல் பாலிவுட் வரை சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். தனது உடை, நடை, பாவனை என அனைத்திலும் ஸ்டைல் காட்டிய ரஜினிக்கு பின்னணியில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அபூர்வ ராகங்கள் தொடங்கிய அவரது பயணம் ஆலமரக்கிளைகளாக விரிய, இன்று யாரும் நெருங்க முடியாத இடத்தில் ரஜினிகாந்த் இருக்கிறார்.

ஒவ்வொரு வருடமும் புதுமுக நடிகர்கள் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய இடத்தை பிடித்தாலும் அவர்களால் சூப்பர் ஸ்டார் அடைந்த உச்சத்தின் நிழலை கூட தொட முடியவில்லை என்று கூறலாம். 80, 90களில் கொடி கட்டி பறந்த ரஜினிகாந்த், எண்ணிலடங்கா வெற்றி படங்களை கொடுத்து அசத்தினார். குறிப்பாக அந்த நேரத்தில் வெளியான பாட்ஷா திரைப்படம், இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் கேங்ஸ்டர் திரைப்படங்களுக்கு டெம்ப்ளேட்டாகவும் பாட்ஷா அமைந்தது.

- Advertisement -

2 ஆயிரம் ஆண்டு பிறந்தாலும் ரஜினியின் வெற்றி பயணம் தொடர்ந்தது. அந்த சமயத்தில் சந்திரமுகி, சிவாஜி, எந்திரன் திரைப்படங்கள் பிளாக் பஸ்டர் வெற்றியை ருசித்தன. ஆனால் இதன்பிறகு ரஜினிகாந்தின் திரையுலக பயணத்தில் சிறு சறுக்கல் ஏற்பட்டது என்றே கூறலாம். அப்போது காலா, பேட்ட படங்கள் விமர்சன ரீதியாக பேசப்பட்டாலும் அவை சூப்பர் ஸ்டார் படங்களுக்கான வெற்றியை பெறவில்லை. குசேலன், கோச்சடையான், லிங்கா, தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்கள் வந்த இடம் தெரியாமல் மறைந்து போனதால், கடும் விமர்சனத்திற்கு ஆளானார் ரஜினிகாந்த். தொடர் தோல்விகளால் துவண்டிருந்த ரஜினிக்கு, மிகப் பெரிய கம் பேக்கை கொடுத்தது ஜெயிலர் திரைப்படம்.

அதன் திரைக்கதையை பார்க்கும் போது அந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்றாலும், மாஸ் காட்சிகளை சரியான இடங்களில் இயக்குனர் நெல்சன் தூவி விட்டதால் படம் சக்கை போடு போட்டது. 700 கோடி ரூபாய்க்கும் மேல் ஜெயிலர் வசூலை குவித்ததால், ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு காரை தயாரிப்பு நிறுவனம் பரிசாக அளித்தது. இந்த படத்தின் வெற்றியால் உற்சாகமடைந்துள்ள ரஜினிகாந்த், புதிய உத்வேகத்துடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

ஏற்கனவே லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், இப்போது ஜெய் பீம் இயக்குனருடன் பணிபுரிந்து வருகிறார். இதையடுத்து தனது 171வது படத்தில் லோகேஷ் கனகராஜுடன் அவர் இணைகிறார். இப்படி பிஸியாக ரஜினிகாந்த் ஓடி கொண்டிருக்க, அவரை பற்றிய ஒரு ரகசியத்தை மகள் சௌந்தர்யா பகிர்ந்துள்ளார்.

அதில் எனது தந்தை ரஜினிக்கு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு பேச தெரியும் என்றும், தமிழ் மொழியை எழுத தெரியாது என்றும் தெரிவித்துள்ளார். என்னை வாழ வைக்கும் தெய்வங்கள் என தமிழக மக்களை பார்த்து அடிக்கடி கூறும் ரஜினிகாந்த், தமிழ் மொழியை எழுத கற்று கொள்ளவில்லையா என்று சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்