- Advertisement -
Homeபொழுதுபோக்குகரகாட்டக்காரன் படத்தில் நடிகை கனகா கேரக்டரில் நடிக்க இருந்தது இந்த பிரபல மலையாள நடிகையா? -...

கரகாட்டக்காரன் படத்தில் நடிகை கனகா கேரக்டரில் நடிக்க இருந்தது இந்த பிரபல மலையாள நடிகையா? – அட சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணியிருக்காரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் கொண்டாடப்படும் ஒரு கிளாசிக் திரைப்படமாக கரகாட்டக்காரன் படம் உள்ளது. கடந்த 1989ம் ஆண்டில் ஜூன் 16ம் தேதி இந்த படம் வெளியானது. 35 ஆண்டுகள் ஆனாலும் இந்த படம் இன்றும் ரசிகர்கள் விரும்பி ரசிக்கும் ஒரு தரமான படைப்பாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது.

கங்கை அமரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் ராமராஜன் கனகா சண்முகசுந்தரம் சந்திரசேகர் சந்தான பாரதி வடிவுக்கரசி கவுண்டமணி செந்தில் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பல தியேட்டர்களில் 365 நாட்களை கடந்து ஓடிய வெற்றிப் படமாக இருந்தது. பெரும்பாலான தியேட்டர்களில் 100 நாட்கள் 150 நாட்கள் 200 நாட்கள் வரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது.

- Advertisement -

இன்றும் கூட கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற மாங்குயிலே பூங்குயிலே பாடல் டிரண்டிங்கில் இருக்கிறது. சிவாஜி கணசேன் பத்மினி நடித்த தில்லானா மோகனாம்பாள் கதையை உல்டாவாக்கி தான் கரகாட்டக்காரன் திரைக்கதையை கங்கை அமரன் உருவாக்கி இருந்தார். கவுண்டமணி செந்தில் வாழைப்பழ காமெடியும் இந்த படத்துக்கு பக்கபலமாக இருந்தது.

கரகாட்டக்காரன் படம்தான் நடிகை கனகாவுக்கு முதல் படம்; இந்த படத்தில் அறிமுகமான பிறகுதான் அதிசய பிறவி தங்கமான ராசா கோவில் காளை சாமுண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்து அவர் பிரபலமான நடிகையாக மாறினார். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அவர் சினிமாவில் நடிக்காமல் தனித்து வாழ்ந்து வருகிறார்.

- Advertisement -

மலையாளத்தில் பிரபல நடிகையாக இருப்பவர் ஷோபனா. தமிழில் ரஜினியுடன் தளபதி பாக்யராஜூடன் இது நம்ம ஆளு விஜயகாந்துடன் பொன்மனச் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் மலையாளத்தில் மணிச்சித்ரத்தாழ் என்ற படத்தில் நடித்த கேரக்டரில்தான், சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஷோபா கூறுகையில், கரகாட்டக்காரன் படத்தில் நான்தான் முதலில் நடிக்க இருந்தேன். ஆனால் வேறு படங்களில் பிஸியாக இருந்ததால் நடிக்க முடியவில்லை. அதே போல் மலையாளத்தில் திரிஷியம் படமும் நான் நடிக்க வேண்டியது. முழு ஸ்கிரிப்ட்டும் எனக்கு வந்தது. அந்த படத்திலும் நடிக்க முடியாமல் போய்விட்டது என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்