- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் ரஜினிகாந்தின் மகள், அதனால் எந்த வியப்பும் எனக்கு ஏற்படுவதே இல்லை - ஓபனாக பேசிய...

நான் ரஜினிகாந்தின் மகள், அதனால் எந்த வியப்பும் எனக்கு ஏற்படுவதே இல்லை – ஓபனாக பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த்!

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் லவ் என்ற படத்தில் தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த தொடர் இன்றைய டிஜிட்டல் உலகில் காதல் டேட்டிங் உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறி இருக்கின்றன என்பதை சொல்லும் ஒரு கதைக்களத்தில் உருவாகியுள்ளது. நகைச்சுவையுடன் உணர்வு பூர்வமான ஒரு கதையாக லவ் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அறிமுக விழா நேற்று சென்னையில் நடந்தது.

இந்த விழாவில் சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியதாவது, என்னை நம்பி இந்த கதையை வழங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கும் குறிப்பாக மோனிகாவுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மும்பையில் இந்த தொடருக்கான கதை விவாதம் நடந்த போது அவருடன் இருந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பானது. என்ன ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும் சிறந்த கதை சொல்லியாகவும் உருவாக அவர் அளித்து உத்வேகம் மறக்க முடியாதது.

நான் அதிகமான விஷயங்களில் எளிதில் வியப்படைவதில்லை. ஏனென்றால் நான் சூப்பர் ஸ்டாரின் மகள். அனைவராலும் போற்றப்படும் ஒருவருடன் வாழும் போது மற்றவர்களை பார்த்து வியக்கும் பழக்கம் குறைந்து விடும். ஆனால் மோனிகா என்னை மிகவும் வியக்க வைத்தவர். அவர் ஒரு சிறந்த தலைவர். மிகப்பெரிய உத்வேகம் தருபவர்.

இந்த தொடரின் ஷோ – ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு. ஒரு கதையை ஆரம்பத்தில் இருந்து இறுதிக்கட்டம் வரை கொண்டு செல்வது என்னுடைய பொறுப்பாக மாறியது. அந்த பயணத்தில் பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருந்தது. எடுத்த முடிவுகளில் உறுதியாக இருப்பதோடு தேவையான நேரத்தில் அவற்றை மாற்றிக் கொள்ளவும் கற்றுக் கொண்டேன்.

கடைசியில் இந்த தொடரை நாங்கள் நினைத்த இடத்திற்கு சரியாக கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே நோக்கமாக இருந்தது. இந்த பயணத்தில் நான் கற்றுக் கொண்ட மிகப்பெரிய விஷயம், முடிவுகளை எடுப்பது கடினமாக இருந்தாலும் சரியான நேரத்தில் அந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது என்று சௌந்தர்யா ரஜினிகாந்த் அந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

சற்று முன்