சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்களான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இருவரும் திரைத் துறையில் இயக்குனர்களாக கவனம் செலுத்தி வருகின்றனர். இதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
தனது கணவர் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசனை வைத்து இந்த திரைப்படத்தை இயக்கினார். இதில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், தனது முதல் திரைப்படத்திலேயே அனைத்து பாடல்களையும் சூப்பர் டூப்பர் ஹிட் பெறச் செய்தார். குறிப்பாக இதில் தனுஷ் அனிருத் கூட்டணியில் உருவான ஒய் திஸ் கொலவெறி பாடல் உலகம் முழுவதும் ஹிட் அடித்தது.
3 திரைப்படம் வெளியான சமயத்தில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், இப்போது பலரும் அதனை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பள்ளி காதலை அழகாக காட்சிப்படுத்தி சபாஷ் போட வைத்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் கௌதம் கார்த்திக்கை வைத்து, வை ராஜா வை படத்தை இயக்கினார். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா, லைகா நிறுவனம் தயாரிப்பில் லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இதில் சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதேபோல் ஐஸ்வர்யாவின் தங்கை சௌந்தர்யா ரஜினிகாந்த்தும், திரைப்படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்தார். ரஜினி நடிப்பில் கோச்சடையான் படத்தை அவர் இயக்கியிருந்தார்.
அனிமேஷனாக உருவாக்கப்பட்டு ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த இந்த திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் வசூல் பெற தவறியது. இதன் பிறகு, தனுஷை வைத்து வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் சௌந்தர்யா இயக்கி இருந்தார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான கோவா திரைப்படத்தையும் சௌந்தர்யாவை தயாரித்திருந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் திரைத்துறைக்கு வந்திருக்கும் அவர், வெப்சீரிசை தயாரிக்க இருக்கிறார்.
கேங்க்ஸ் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த வெப் தொடரை ஆபிரகாம் என்பவர் இயக்குகிறார். அமேசான் ஓடிடி தளத்தில் இந்த தொடர் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் போர் தொழில் படத்தில் நடித்து வெற்றி பெற்ற இளம் நடிகர் அசோக் செல்வன், இதில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த வெப் தொடரில் நடிக்கும் மற்ற பிரபலங்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





