- Advertisement -
Homeபொழுதுபோக்குமிக பிரமாண்டமாக சினிமா தியேட்டரை கட்டி வருகிறாரா விஜய்?... எங்கே, எப்போது என்று தெரியுமா...

மிக பிரமாண்டமாக சினிமா தியேட்டரை கட்டி வருகிறாரா விஜய்?… எங்கே, எப்போது என்று தெரியுமா…

- Advertisement -

சினிமாவுக்கு வந்த சில வருடங்களிலேயே தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்பதை ஆரம்பித்த விஜய் தற்போது அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சியை தொடங்கியிருக்கிறார். இதற்கு தமிழக வெற்றிக் கழகம் என்றும் பெயர் வைத்துள்ளார். தொடர்ந்து அரசியல் சார்ந்த பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வரும் அவர், நடிப்பிலிருந்து முழுக்கு போட முடிவு செய்திருக்கிறார்.

 

அதன்படி விஜயின் கடைசி திரைப்படத்திற்கு முந்தைய திரைப்படமாக உருவாகி வருகிறது கோட். வெங்கட் பிரபு இயக்கும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளனர். இதுபோக பிரசாந்த் பிரபுதேவா மோகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நிரம்பியுள்ளது.

 

தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடிக்க, ஒரு விஜய்யை மிக இளமையாக காட்டுவதற்காக ஏ ஐ தொழில் நுட்பத்தை நாடி இருக்கிறார் வெங்கட் பிரபு. கிட்டத்தட்ட படத்தில் இருந்து பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்று இருப்பதாகவே கூறப்படுகிறது. கிராபிக்ஸ் பணிகள் அனைத்தையும் வெங்கட் பிரபு முடித்திருப்பதாக சொல்கிறார்கள்.

 

செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சொன்ன தேதியில் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டைம் மெஷின் மையமாக வைத்து இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருப்பதாக சொல்கிறார்கள். தற்போது இதற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றன.

 

இது ஒரு பக்கம் இருக்க, தனது கடைசி திரைப்படத்திற்கான இயக்குநரை விஜய் தேர்ந்தெடுத்து விட்டதாக கூறப்படுகிறது. எச் வினோத் தான் இந்தப் படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிச்சயம் இது அரசியல் சார்ந்த படமாகதான் இருக்கும் என்று பலர் கூறுகிறார்கள்.

 

இந்த நிலையில், இன்னும் சில மாதங்களில் அரசியல் களத்தில் தீவிரமாக ஈடுபடப் போகும் விஜய் அதற்கான மாநாட்டையும் நடத்தி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, பிரம்மாண்டமாக ஒரு திரையரங்கை விஜய் கட்ட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரியில் தான் அவர் இந்த திட்டத்தை செயல்படுத்த இருப்பதாகவும், விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்