சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு கோடி கோடியாக சம்பளத்தை கொட்டிக் கொடுத்தாலும், திரையரங்குகளில் திரையில் அவர்களை காட்டும்போது அவர்களது நடிப்பை பார்த்து பாராட்டி, ரசிகர்கள் எழுப்பும் கைதட்டல் சத்தமும், விசில் சத்தமும் தான் அந்த கலைஞர்களுக்கு மிகப்பெரிய விருதாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அதனால் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்றவர்கள் விருதுகளை காட்டிலும் ரசிகர்களின் கைதட்டலே மிகப்பெரிய விருது என்று கூறியிருக்கின்றார். எனினும் சினிமா சார்ந்த அமைப்புகள், சினிமா பத்திரிகைகள் ஆண்டுதோறும் தொடர்ந்து, சிறந்த படங்களை தேர்வு செய்து அந்த படைப்பாளிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஒரு விதத்தில் கலைஞர்களின் திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரமும், அடையாளமுமாக இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
அந்த வகையில் இப்போது 2023 ஆம் ஆண்டுக்கான 68வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழில் வெளிவந்த பல முக்கிய படங்கள் இடம்பெற்றுள்ளன. 68-வது பிலிம் பேர் விருதுகள் பெற்ற முழு விவரங்கள் வெளியாகி உள்ளது. 68 ஆவது பிலிம்பேர் விருதுகள், தமிழ் 2023 சிறந்த நடிகர்கள், சிறந்த நடிகைகள், இசையமைப்பாளர்கள், சிறந்த இயக்குனர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
சென்ற 2023 ஆண்டில் வெளியான சிறந்த சினிமா, சிறந்த கலைஞர்களை கௌரவிக்கும் விதமாக பிலிம்பேர் டிஜிட்டல் முறையில் வெற்றியாளர்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் பிலிம்பேர் விருது வெற்றியாளர்கள் 2023 ஆம் ஆண்டு தமிழ் படைப்பாளிகளுக்கான விருது பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி சிறந்த படம் – பொன்னியின் செல்வன் 1, சிறந்த இயக்குனர் – மணிரத்னம் (பொன்னியின் செல்வன் 1) சிறந்த திரைப்படம் (விமர்சகர்கள்) கடைசி விவசாயி (இயக்குனர் மணிகண்டன்), சிறந்த நடிகர் (லீட் ரோல்) – கமல்ஹாசன் (விக்ரம்) சிறந்த நடிகர் (விமர்சகர்கள்) தனுஷ் (திருச்சிற்றம்பலம்) ஆர். மாதவன் (ராக்கெட்ரி), சிறந்த நடிகை சாய்பல்லவி ( கார்கி) சிறந்த நடிகை (விமர்சகர்கள்) நித்தியா மேனன் (திருச்சிற்றம்பலம்) ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
துணை வேடத்தில் சிறந்த நடிகர் – காளி வெங்கட் (கார்கி) துணை வேடத்தில் சிறந்த நடிகை – ஊர்வசி (வீட்ல விசேஷம்) சிறந்த இசை ஆல்பம் – ஏஆர் ரகுமான் (பொன்னியின் செல்வன் 1) சிறந்த பாடல் வரிகள் – தாமரை (மறக்குமா நெஞ்சம்) சிறந்த பின்னணி பாடகர் – சந்தோஷ் நாராயணன் (தேன்மொழி – திருச்சிற்றம்பலம்) சிறந்த பின்னணி பாடகி – அந்தர நந்தி (அலைக்கடல் – பொன்னியின் செல்வன் 1) சிறந்த அறிமுக நாயகி – அதிதி சங்கர் (விருமன்) சிறந்த அறிமுக நாயகன் – பிரதீப் ரங்கநாதன் (லவ் டுடே) சிறந்த ஒளிப்பதிவு – கே கே செந்தில்குமார் (ஆர்ஆர்ஆர்) ரவிவர்மன் – ( பொன்னியின் செல்வன் 1) ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.





