- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல் மரியாதை படத்தில் சிவாஜி கேரக்டரில் நடிக்க வேண்டியவர் இவரா? டைரக்டர் பாரதிராஜா போட்ட பிளான்...

முதல் மரியாதை படத்தில் சிவாஜி கேரக்டரில் நடிக்க வேண்டியவர் இவரா? டைரக்டர் பாரதிராஜா போட்ட பிளான் – கடைசியில் என்ன ஆச்சு?

- Advertisement -

இயக்குனர் இமயம் என்று போற்றப்படும் பாரதிராஜா தமிழ் சினிமாவில் ஆளுமை மிக்க மிகச் சிறந்த ஒரு படைப்பாளியாக தன்னை பல படங்களில் நிரூபித்தவர். பாரதிராஜா தனது படத்தில், கல்லையும் நடிக்க வைப்பார் என்று பெருமையாக சொல்லும் அளவுக்கு, திறமை மிகுந்த மிகச் சிறந்த ஒரு கலைஞர்.

பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே, கல்லுக்குள் ஈரம், கிழக்கு போகும் ரயில், கடலோரக் கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை போன்ற பல படங்களில் மிக முக்கியமான, முதன்மையான படம் முதல் மரியாதை. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ராதா, வடிவுக்கரசி, ஜனகராஜ், சத்யராஜ், ரஞ்சனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

- Advertisement -

முதல் மரியாதை மிகப்பெரிய அளவில், தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற படம். எப்போதும் ரசிகர்களால் மிகவும் விரும்பி பார்க்கப்படும் மிக முக்கியமான ஒரு படமாக, தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், இயக்குனர் பாரதிராஜாவே நினைத்தாலும் மீண்டும் ஒரு முதல் மரியாதை படத்தை தர முடியாது என்று சொல்லும் அளவுக்கு இந்த படம் அற்புதமான ஒரு படமாக தமிழ் சினிமாவில் கருதப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் சிவாஜி கணேசன், ஊர் தலைவராக இருப்பார். அங்கு பரிசல் ஓட்டும் பெண்ணாக வரும் ராதா மீது, ஒருகட்டத்தில் காதல் கொள்வார். ஒரு கட்டத்தில் ராதா, சத்யராஜை கொன்று விட்டு சிறைக்கு செல்வார். இதற்கிடையில் சத்யராஜின் மகள்தான் சிவாஜியின் மனைவி வடிவுக்கரசியின் மகள் என்பது தெரியவரும். இப்படி படத்தில் பல டிவிஸ்ட்டுகள் இருக்கும்.

- Advertisement -

ஜனகராஜ் காமெடி, இந்த படத்தின் சிறப்பாக இருந்தது. படத்தின் பாடல்கள் அனைத்துமே, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடல்கள் அமைந்தன. இளையராஜா இசையில், வைரமுத்துவின் வரிகளில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் பாடல்களாக இருந்தன, வெட்டி வேரு வாசம், பூங்காத்து திரும்புமா, அந்த நிலாவ தான் கையில புடிச்சேன் போன்ற பாடல்களை மலேசியா வாசுதேவன் எஸ் ஜானகி சித்ரா உள்ளிட்டோர் பாடியிருந்தனர்.

ஆனால் இந்த படத்தில் சிவாஜி கேரக்டரில் எஸ்பி பாலசுப்ரமணியம் நடிக்க வேண்டும் என்று பாரதிராஜா ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் அப்போது பாடகர் எஸ்பிபி படங்களுக்கு பாடுவதில் பிஸியாக இருந்ததால் இந்த படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகுதான் இந்த கேரக்டரில் நடிகர் சிவாஜி கணேசன் நடிக்க வைத்தார் பாரதிராஜா என்று நடிகர் சித்ரா லட்சுமணன் ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார். முதல் மரியாதை படத்தில் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஒரு பாடல் கூட பாடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

- Advertisement -

சற்று முன்