- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் முரளி குடும்பத்துக்கும் இசைஞானி இளையராஜா குடும்பத்துக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? ஆச்சரியப்பட்ட தமிழ் சினிமா...

நடிகர் முரளி குடும்பத்துக்கும் இசைஞானி இளையராஜா குடும்பத்துக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா? ஆச்சரியப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த 1976ம் ஆண்டில் அன்னக்கிளி படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. கடந்த 48 ஆண்டுகளாக 1300க்கும் மேற்பட்ட படங்களுக்கும் பல ஆயிரக்கணக்கான பாடல்களுக்கும் இசையமைத்தவர். இசைஞானி என சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்.

தனிப்பட்ட முறையில் அவர் பேசுகிற விதம், நடந்துக்கொள்கிற விதம் சில நேரங்களில் கடும் சர்ச்சையை, விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் இசையில் அவர் ஒரு ராஜா தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. குழந்தை முதல், தள்ளாடும் முதியவர் வரை அவரது பாடலை, இசையை ரசிக்காதவர் யாரும் இருக்கவே முடியாது.

- Advertisement -

இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் ஒரு இசையமைப்பாளர், பாடகர். இளையராஜாவின் மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா இருவரும் இசையமைப்பாளர்கள். மகள் பவதாரணியும் ஒரு பாடகி. கங்கை அமரன் மகன் வெங்கட்பிரபுவும் இயக்குனர் என அவரது குடும்பமே கலைக்குடும்பமாக உள்ளது.

தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக ரசிகர்களின் மனதில் நின்றவர் நடிகர் முரளி. கன்னட இயக்குனர் சித்தரலிங்கையா என்பவரது மகன். 1984ம் ஆண்டில் பூவிலங்கு என்ற படம் மூலம் தமிழில் நடிகராக அறிமுகமானார். தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அவர் மறைந்து விட்டார்.

- Advertisement -

மறைந்த நடிகர் முரளிக்கு அதர்வா, ஆகாஷ் என்ற மகன்கள் உள்ளனர். ஒரு மகளும் இருக்கிறார். அதர்வா, பாணா காத்தாடி என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முரளியின் மற்றொரு மகன் ஆகாஷ் நடிகரான அறிமுகமான நேசிப்பாயா படம் வரும் 14ம் தேதி ரிலீஸாகிறது. இதில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் முரளி நடிகராக அறிமுகமான பூவிலங்கு படத்துக்கு இசையமைத்தவர் இளையராஜா. முரளியின் மூத்த மகன் அதர்வா அறிமுகமான பாணா காத்தாடி படத்துக்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா, அவரே முரளியின் இளைய மகன் ஆகாஷ் நடிகராக அறிமுகமாகும் நேசிப்பாயா படத்துக்கும் இசையமைத்துள்ளார். இப்படி முரளி குடும்ப வாரிசுகள் நடிகராக அறிமுகமாகும் படங்களுக்கு இளையராஜா குடும்பமே இசையமைக்கிறது என்ற ஒற்றுமை ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்