- Advertisement -
Homeபொழுதுபோக்குநேற்று தனது 87வது பிறந்த நாளை கொண்டாடிய காமெடி கிங் நடிகர் கவுண்டமணி - அவருக்கு...

நேற்று தனது 87வது பிறந்த நாளை கொண்டாடிய காமெடி கிங் நடிகர் கவுண்டமணி – அவருக்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா?

- Advertisement -

நடிகர் கவுண்டமணி இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே படத்தில் கூத்து வாத்தியார் கேரக்டரில் அறிமுகமானவர். ரஜினியுடன் பல காட்சிகளில் இணைந்து நடித்திருந்தார். இயக்குனர் பாரதிராஜாவிடம் கவுண்டமணிக்காக பேசி பரிந்துரை செய்து போராடி அந்த கேரக்டரை கவுண்டமணிக்கு பெற்றுத் தந்தவர் அந்த படத்தின் உதவி இயக்குனர் கே பாக்யராஜ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் கவுண்டமணி தீவிரமான பெருமாள் பக்தர். ஒரு காலத்தில் அடிக்கடி திருப்பதி சென்று கொண்டிருந்தவர், பிறகு சென்னை திநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கும் சென்று வந்தார். இப்போது சாய்பாபாவையும் வணங்குகிறார். இதுவரை அவர் பத்திரிக்கை மற்றும் டிவிகளில் நேர்காணல் கொடுத்தது இல்லை. பேட்டி என்றால் வேண்டாம் என்று செய்தியாளர்களிடம் வெளிப்படையாக சொல்லிவிடுவார்.

- Advertisement -

அவரது வாழ்க்கை வரலாறை சிலர் படமாக எடுக்க முயற்சித்தனர். ஆனால் எதுக்கு அதை எழுதி படமாக்க வேண்டும். நான் அதை விளம்பரப்படுத்த நினைக்கவில்லை என்று கவுண்டமணி மறுத்துவிட்டார். நடிகர்கள் சத்யராஜ் கார்த்திக் அர்ஜூன் ஆகியோருடன் கவுண்டமணி நெருக்கமான நட்பில் இருந்தார். அவர் அடிக்கடி இப்போதும் போனில் பேசுவது நடிகர் சத்யராஜிடம் தான்.

நடிகர் விஜயுடன் ரசிகன் கோயம்புத்தூர் மாப்பிள்ளை என 2 படங்களில் கவுண்டமணி நடித்திருக்கிறார். நடிகர் விஜய் கவுண்டமணியின் தீவிரமான ரசிகர். கவுண்டமணி மனைவி இறந்த போது விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பொதுவாக அரசியல் விஷயங்களை விலகி நிற்கும் கவுண்டமணி, விஜய் முதல்வர் ஆனபோது அவராகவே வாழ்த்துகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கவுண்டமணி விரும்பி அசைவம் சாப்பிட்டவர். ஆனால் இப்போது சைவத்திற்கு மாறிவிட்டார். பண விஷயத்தில் அவர் கறார் பார்ட்டி. யாரையும் ஏமாற்ற மாட்டார். படப்பிடிப்பில் அதிக செலவு வைக்க மாட்டார். ஆனால் சம்பளத்தை சரியாக வாங்கி விடுவார். இல்லாவிட்டால் டப்பிங் பேச மறுத்துவிடுவார். சில கருப்பு வெள்ளை படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் அவரை அடையாளம் காட்டியது 16 வயதினிலே படம் தான். அந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த பாக்யராஜ் மீது எப்போதுமே தனி மரியாதை பாசம் கவுண்டமணிக்கு உண்டு.

இளையராஜாவும் கவுண்டமணியும் நாடகக் கால நண்பர்கள். வயதில் இளையராஜாவை விட கவுண்டமணி மூத்தவர். அவரை ராஜா என்று பெயர் சொல்லி அழைக்கும் சிலரில் கவுண்டமணியும் ஒருவர். கவுண்டமணியின் தீவிர ரசிகர் சிவகார்த்திகேயன். கவுண்டமணி வாத்தியாராக நடிக்கவும் சிவகார்த்திகேயன் மாணவராக நடிக்கவும் ஒரு கதை உருவானது. சில காரணங்களால் பிறகு அந்த படம் அப்படியே டிராப் ஆகிவிட்டது.

- Advertisement -

சற்று முன்