- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படத்தை திரையிட வேண்டாம்.. விஜய்க்கு கடிதம் எழுதிய எம்.பிக்கள்.. என்னப்பா கடல் தாண்டியும் பிரச்னையா?

லியோ படத்தை திரையிட வேண்டாம்.. விஜய்க்கு கடிதம் எழுதிய எம்.பிக்கள்.. என்னப்பா கடல் தாண்டியும் பிரச்னையா?

- Advertisement -

விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் நாளை பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவிருக்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் படம் வெளியாகவிருக்கிறது. இதன் காரணமாக நாளை கண்டிப்பாக லியோ நாளாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர். டிக்கெட் புக்கிங்கிலும் லியோ பெரும் மாஸ் காட்டிவருகிறது.

இப்படி மாஸ் காட்டினாலும் லியோவுக்கு பிரச்னை வராமல் இல்லை. வழக்கமாக விஜய் படங்கள் ரிலீஸ் என்றாலே ஏதாவதொரு பிரச்னை வந்துகொண்டிருக்கும். ஆனால் இந்தப் படத்துக்கோ திரும்பிய பக்கமெல்லாம் பிரச்னை எழுந்து நிற்கிறது. நா ரெடிதான் பாடலில் ஆரம்பித்த முதல் பிரச்னை அனுமன் வால் போல் நீண்டுகொண்டே செல்கிறது.

- Advertisement -

அவற்றிற்கு ஆறுதல் அளிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு லியோ படத்துக்கான சிறப்பு காட்சி அனுமதியை கொடுத்தது. ஜெயிலருக்கே கிடைக்காத சிறப்பு காட்சி அனுமதி எங்களுக்கு கிடைத்துவிட்டதாக விஜய் ரசிகர்கள் மார்தட்டினர். ஆனால் பெரும் ட்விஸ்ட்டாக சிறப்பு காட்சியை காலை 9 மணிக்கு திரையிடுங்கள் என குறிப்பிட்டது தமிழக அரசு. இதனால் படக்குழு உச்சக்கட்ட அப்செட் ஆனது.

இதனையடுத்து அதிகாலை காட்சி வேண்டுமென்ற கோரிக்கையுடன் நீதிமன்றம் சென்றது படத்தயாரிப்பு நிறுவனம். ஆனால் நீதிமன்றமோ அதற்கு அனுமதி மறுத்தது. சரி 7 மணி காட்சிக்காவது அனுமதி வேண்டுமென கோரியது படத்தயாரிப்பு நிறுவனம். ஆனால் அதற்கும் அனுமதி மறுத்து அந்தக் காட்சி வேண்டுமென்றால் தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியது.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து மீண்டும் தமிழ்நாடு அரசிடம் வந்தது படத்தயாரிப்பு நிறுவனம். ஆனால் 7 மணி காட்சிக்கெல்லாம் வாய்ப்பில்லை ராஜா என்று கூறிவிட்டது தமிழ்நாடு அரசு. இதனால் 9 மணிக்குதான் லியோவின் முதல் காட்சி திரையிடப்படுகிறது. தமிழ்நாட்டில்தான் இந்த நிலைமைதான் மற்ற மாநிலங்களில்,நாடுகளில் எந்த பிரச்னையும் இல்லை என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தனர் ரசிகர்கள்.

ஆனால் அந்த நிம்மதி பெருமூச்சுக்கு ஆப்பு வைக்கும்வகையில் இலங்கையில் ஒரு விஷயம் நடந்திக்கிறது. அதாவது, லியோ படத்தை நாளை திரையிட வேண்டாம் என இலங்கை தமிழ் எம்பிக்கள் விஜய்க்கு கடிதம் எழுதியிருக்கின்றனர். அந்தக் கடிதத்தில் முல்லைத்தீவை விட்டு வெளியேறிய மாவட்ட நீதிபதிக்கு ஆதரவாக நாளை போராட்டம் நடக்கவுள்ளது. எனவே லியோ ரிலீஸானால் இளைஞர்கள் படத்துக்கு செல்வார்கள்.எனவே போராட்டத்துக்கு பின்னடைவு ஏற்படும் என குறிப்பிட்டிருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்