- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக அரசியல் வருகையால் தமிழக தேர்தல் களத்தில் ஏற்பட்ட புதிய சூழல், ஒற்றுமையாக களமாடி...

தவெக அரசியல் வருகையால் தமிழக தேர்தல் களத்தில் ஏற்பட்ட புதிய சூழல், ஒற்றுமையாக களமாடி வெற்றி காண்போம் – தளபதி விஜய் வெளியிட்ட அறிக்கை!

- Advertisement -

கடந்த 2024ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 2ம் தேதி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது அரசியல் இயக்கம் குறித்து அறிவித்து அரசியல் பிரவேசத்தை தமிழக மக்களுக்கு தெரியப்படுத்தினார். இப்போது 2 ஆண்டுகளை கடந்த நிலையில் இன்று தவெக கட்சி 3ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தவெக கட்சிக்கு மக்கள் மத்தியில் அபரிமிதமான ஆதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவியில் கூறியிருப்பதாவது, என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நம் உயிரனைய இயக்கமான தமிழக வெற்றிக்கழகத்தின் மகிழ்ச்சிகரமான மூன்றாம் ஆண்டு இன்று தொடங்குகிறது.

- Advertisement -

இரண்டு ஆண்டுகளை இயல்பாகவும் இயல்பு தாண்டியும் நிறைவு செய்து நீள்கிறது நமது அரசியல் பெரும் பயணம். முதன்மை அரசியல் சக்தியாக பரிணமிக்கும் முன்பே மக்கள் இயக்கமாக மக்களோடு மக்களாக கலந்து நின்றவர்கள் நாம். இதை நாடறியும் நல்லவர்கள் அறிவார்கள். ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லலாம்.

சமநிலை தவறாத அளக்க இயலாத ஆழ்கடல் தவெக. எவராலும் விலக்க இயலாத விரிவானம் தவெக. அத்தனை இலக்குகளையும் அர்ப்பணிப்புடன் வெல்லும் சாமானிய மக்களுக்கான அதிகார அரசியலின் வெற்றி போர் முரசாம் தவெக. வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் களம் இதுவரை இல்லாத புதிய சூழலை சுமந்து நிற்கிறது.

- Advertisement -

இதற்கு ஒரே காரணம் நமது அரசியல் வருகை மட்டுமே என எல்லோரும் சொல்கின்றனர். எனவே இச்சூழலில் தளத்தை நமதாக்கி தேர்ந்த தெளிவுடன் திறன்மிக்க நுட்பத்துடனும் தேர்தல் அரசியல் வெற்றியின் வாயிலாக அதிகார அரசியல் அங்கீகாரம் நோக்கிச் செல்வோம்.

அனைத்து மக்களையும் அமோக ஆதரவுடன் தீர்க்கமுடன் ஒற்றுமையாக களமாடி ஆட்சி பீடத்தை கைக்கொள்ளும் ஜனநாயக இலக்கை உறுதியாக வெல்வோம். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று நடிகர் விஜய் தனது பதிவில் கூறியிருக்கிறார். இன்று பனையூரில் நடந்த தவெக 3ம் ஆண்டு விழாவில் நடிகர் விஜய் பங்கேற்று பேசினார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.

- Advertisement -

சற்று முன்