- Advertisement -
Homeபொழுதுபோக்குஎஸ்டிஆர் 49 படப்பிடிப்பு இப்போது துவங்க வாய்ப்பில்லே, 2 மாதங்கள் தள்ளிப் போட்ட நடிகர் சிம்பு...

எஸ்டிஆர் 49 படப்பிடிப்பு இப்போது துவங்க வாய்ப்பில்லே, 2 மாதங்கள் தள்ளிப் போட்ட நடிகர் சிம்பு – ஆரம்பத்திலேயே இயக்குனர் சொதப்பினா எப்படீங்க?

- Advertisement -

நடிகர் சிலம்பரசன் இப்போது தனது 49 50 மற்றும் 51வது படங்களில் நடிக்க மிகவும் ஆவலாக இருக்கிறார். இதில் எஸ்டிஆர் 49 படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் சந்தானம் நடிக்கிறார். கயாடு லோஹர் இந்த படத்தில் நாயகியாக நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இதையடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் படம் எஸ்டிஆர் 50. வரலாற்று பின்னணி கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை நடிகர் சிம்புவே தனது அட்மின் சினி ஆர்ட்ஸ் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார் என்றும், ரூ. 150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக உள்ளதாகவும் தகவல் வெளியானது.

- Advertisement -

அத்துடன் எஸ்டிஆர் 51 படத்தை டிராகன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார் என்பதும் ஏற்கனவே அறிந்த தகவல்தான். இந்த சூழலில் நடிகர் கமலுடன் முதன் முறையாக சிம்பு இணைந்து நடித்த தக்லைஃப் படம் வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி வெளியாக உள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து சிம்பு பங்கேற்றும் வருகிறார்.

இதற்கிடையே நடிகர் சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 49 படத்தின் படப்பிடிப்பு இந்த வாரத்தில் துவங்குவதாக இருந்தது. ஆனால் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன், இன்னும் நான் முழு கதையை ஸ்கிரிப்ட்டை எழுதி முடிக்கவில்லை. கதையில் சில திருத்தங்கள் மாற்றங்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது என சிம்புவிடம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

அதுகுறித்து இயக்குனருடன் சிம்பு ஆலோசித்த நிலையில் இன்னும் கதை திரைக்கதையில் வலுவான காட்சிகள் தேவைப்படுகிறது என்பதால் படப்பிடிப்பு இப்போதைக்கு வேண்டாம் என்று சிம்புவே அதிரடி முடிவு எடுத்திருக்கிறார். இன்னும் 2 மாதங்கள் கழித்து வருகிற ஜூன் மாதம் படப்பிடிப்பை துவங்கலாம். அதற்குள் ஸ்கிரிப்ட் ஒர்க்கை தெளிவாக முடித்து விடுங்கள் என இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனிடம் கூறிவிட்டார்.

இந்த சூழலில் எஸ்டிஆர் 49 படத்தில் நடிக்க நடிகர் சந்தானம் கால்ஷீட் கொடுத்திருந்தார். மேலும் இந்த படத்தில் விடிவி கணேஷூம் நடிப்பதாக இருந்தது. இப்போது திடீரென 2 மாதங்கள் படப்பிடிப்பு தள்ளிப் போவது சிம்பு ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது. ஆரம்பமே இப்படி சொதப்பலா இருக்குதே என்று புலம்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்