- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட… இந்த சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க நடிகர் சூர்யா மறுத்து விட்டாரா? ...

அட… இந்த சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க நடிகர் சூர்யா மறுத்து விட்டாரா? இந்திய சினிமாவே கொண்டாடிய சூப்பர் ஹிட் படமாச்சே அது? – புலம்பும் சூர்யா ரசிகர்கள்

- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை, வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்களால் மட்டுமே, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் முக்கிய இடத்தை, முன்னணி இடத்தை அடைய முடியும். வருகிற வாய்ப்பை எல்லாம் தட்டிக் கழித்தால், ஒரு கட்டத்தில் அந்த கலைஞரையே ரசிகர்கள் தட்டிக் கழித்துவிடும் ஒரு மோசமான சூழ்நிலை சினிமாவில் ஏற்பட்டு விடும். அதற்கு பல நடிகர்களை உதாரணமாக சொல்லலாம்.

காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சூரி. காதல், தீபாவளி, வின்னர் போன்ற சில படங்களில் அவர் நடித்திருக்கிறார் என்பதே இப்போது படம் பார்க்கும்போதுதான் ரசிகர்களுக்கு தெரிகிறது. ஏனென்றால் அந்த படங்களில் நடித்த போது, சூரி என்றால் யார் என்றே ரசிகர்களுக்கு தெரியாது. ஆனால் பரோட்டோ காமெடி மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சூரி, அடுத்தடுத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

- Advertisement -

குறிப்பாக முன்னணி நாயகர்களுடன் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட சூரி, ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக உருவானார். பிறகு டைரக்டர் வெற்றிமாறன் ஹீரோவாக விடுதலை படத்தில் சூரியை நடிக்க வைத்தார். இப்போது கருடன், கொட்டுக்காளி, விடுதலை 2 என ஹீரோவாக தனது பயணத்தை வெற்றிக்கரமாக தொடர்கிறார் நடிகர் சூரி.

இப்படி கிடைத்த வாய்ப்புகளை எந்தவித சாக்குபோக்கும் சொல்லாமல் பயன்படுத்திக்கொண்டு முன்னேறி காட்டுவதுதான் புத்திசாலித்தனம். ரஜினி, கமல் கூட இந்த அளவுக்கு உயர்ந்த இடத்துக்கு வந்தும் இன்னும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில் மிகவும் உஷாராக இருந்து வருகின்றனர். சின்ன சின்ன விஷயங்களில் கூட தங்களுக்கான வாய்ப்பை அவர்கள் தவற விடுவதே இல்லை.

- Advertisement -

ஆனால் நடிகர் சூர்யா, இன்னும் பல சிகரங்களை தொட வேண்டிய அளவுக்கு திரை பயணத்தில் அவர் கடக்க வேண்டிய தூரம் நிறைய உள்ளது. ஆனால் இப்போதே தனது படங்களுக்கான கதை தேர்வு, கதையில் மாற்றம், திருத்தம், நடிக்க மறுப்பது என பல விஷயங்களை செய்துக்கொண்டு, தனது வளர்ச்சிக்கு அவரே முட்டுக்கட்டைகளை போட்டுக்கொண்டு வருகிறார்.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் 2 பாகங்களாக வெளிவந்து மிகப்பெரிய பான் இந்தியா படமாக, பிளாக்பஸ்டர் மூவியாக வெற்றி பெற்ற படம் பாகுபலி. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகர் சூர்யாவை, ராஜமௌலி அப்போது அணுகியிருக்கிறார். ஆனால் நோ சொல்லி விட்டாராம் சூர்யா. இப்போது அதற்கு வருந்துவதாகவும், இனி ஒருமுறை அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் அதை இழக்க மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார் நடிகர் சூர்யா.

- Advertisement -

சற்று முன்