- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்று என் மகள் சாதித்து விட்டாள், தங்கப் பதக்கம் வாங்கி விட்டாள் - நடிகர்...

இன்று என் மகள் சாதித்து விட்டாள், தங்கப் பதக்கம் வாங்கி விட்டாள் – நடிகர் விஷால் பெருமிதம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் என பல அடையாளங்களுடன் வலம் வருபவர் நடிகர் விஷால். அவர் கடந்த பல ஆண்டுகளாக மாணவர்களின் கல்விக்கு விளம்பரம் இன்றி உதவி செய்து வருகிறார். குறிப்பாக பொருளாதார சூழல் காரணமாக உயர் கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு தனது தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளை மூலம் உதவிகளை செய்து வருகிறார்.

இப்போது அவர் செய்த உதவியால் படித்த மாணவி குறித்து நடிகர் விஷால் ஒரு வீடியோ வெளியிட்டு பேசியிருக்கிறார். சத்தியபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 35வது பட்டமளிப்பு விழாவில் விஷாலின் தேவி சமூக மற்றும் கல்வி அறக்கட்டளையின் உதவியுடன் படித்த 10 மாணவர்கள் பட்டம் பெற்று இருக்கின்றனர்.

- Advertisement -

அதில் தீபிகா என்ற மாணவி பிசிஏ படிப்பில் தங்க பதக்கம் பெற்று சாதனை படைத்திருக்கிறார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த தீபிகா விவசாய குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர் என்று அந்த வீடியோ பதிவில் நடிகர் விஷால் கூறியிருக்கிறார். 2023 – 24ம் காலகட்டத்தில் தேவி அறக்கட்டளைக்கு வந்த தீபிகா தற்போது படிப்பை முடித்ததோடு தங்கப்பதக்கம் வென்று இருப்பது அறக்கட்டளை நிறுவனத்திரை நெகிழ வைத்திருக்கிறது.

இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நடிகர் விஷால் கூறியிருப்பதாவது, இன்னைக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். நான் இப்போது வீடியோ வெளியிட்டது கூட என் படத்திற்காகவோ அல்லது என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் விஷயத்தைப் பற்றிய பேசவோ அல்ல. என்னுடைய மகள் செய்த சாதனையை நான் உங்களிடம் சொல்ல போகிறேன்.

- Advertisement -

என்னுடைய மகள் என்றால் எங்களுடைய அறக்கட்டளை மூலமாக படித்து இன்று கோல்டு மெடல் வாங்கி இருக்கும் தீபிகாவை பற்றி சொல்கிறேன். தீபிகா படித்து வாங்கிய பாராட்டை நினைத்து எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நீ மெடல் வாங்கி இருக்கே. இது உனக்கு மட்டும் கிடைத்த வெற்றி கிடையாது. எனக்கு மட்டும் கிடைத்த சந்தோஷமும் கிடையாது. உன்னை மாதிரி வாழ்க்கையில் சாதிக்கனும், படிக்கணும்ன்னு நினைக்கிற மாணவர்களுக்கு நீ ஒரு முன்மாதிரி.

நான் உன்னை கண்டிப்பாக நேரில் வந்து பார்க்கிறேன். எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது என்று நடிகர் விஷால் பேசியிருக்கிறார். நான் இந்த வீடியோ வெளியிட்டது என்னுடைய அறக்கட்டளை பற்றி பேசுவதற்காகவோ அல்லது நான் செய்து கொண்டிருக்கும் படங்கள் பற்றி பேசவோ அல்ல. தன்னுடைய சொந்த முயற்சியால் படித்து இன்று சாதனை படித்து படித்திருக்கும் தீபிகாவை பார்த்துதான். தீபிகாவை போல பலரும் வெற்றி பெற்ற வெற்றி பெற வேண்டும் என்று நடிகர் விஷால் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்