தமிழ் சினிமாவில் மிகக் குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவருக்கென தனி மார்க்கெட் தற்போது தமிழ் சினிமாவில் உள்ளது. இயக்குனராக பல உயரத்தை தொட்டியிருக்கும் அவர் தான் எடுத்த படத்தில் எல்லாம் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார்.
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய ஐந்து திரைப்படங்களை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். அடுத்ததாக அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து படம் எடுக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
அனிருத் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படம் எல் சி யு வில் வருமா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ், நிச்சயம் இது எல்சி யூ வாக இருக்காது என்றும், இது தனக்கு ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் எனவும் கூறியிருந்தார்.
அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்கு ஆன திரைக்கதை எழுதும் வேளையில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கும் மேலாக அவர் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு மாதமும் ரஜினி சார் தனக்கு கால் செய்து கதையின் அடுத்த கட்டத்தை கேட்பார் என்றும், அவருக்கு ஏதாவது தோன்றினால் அதை மாற்றக் கூறுவார் எனவும் தெரிவித்து இருந்தார்.
அனேகமாக ஜூன் மாதம் இதன் சூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க லோகேஷ் கனகராஜ் இன்று பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். அவரை திரைத்துறையைச் சேர்ந்த பலரும் வாழ்த்தி வருகின்றனர். இப்படியான சூழலில் கமல்ஹாசனும் அவரை வாழ்த்தி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதாவது கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், ஒரு இசை ஆல்பத்தை அவரது மகளான ஸ்ருதிஹாசன் எடுத்திருக்கிறார். காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆல்பத்தில், லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக நடித்திருக்கிறார். இதற்கான வரிகளை கமல்ஹாசனை எழுதி இருக்கிறார். இதற்கு இனிமேல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஆல்பம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





