- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் 68 படம் டைட்டில் அறிவிப்பில் திடீர் மாற்றம், பாஸ் என்ற பெயரும் கன்பார்ம் இல்லையாம்...

விஜய் 68 படம் டைட்டில் அறிவிப்பில் திடீர் மாற்றம், பாஸ் என்ற பெயரும் கன்பார்ம் இல்லையாம் – இப்போ லேட்டஸ்ட் அப்டேட் தெரிஞ்சுக்குங்க!

- Advertisement -

லியோ படத்தை தொடர்ந்து விஜய் நடித்துவரும் படம் விஜய் 68. இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்குகிறார். டைம் டிராவல் சப்ஜெக்ட் ஆன இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த அக்டோபர் 2ம் தேதியன்று பட பூஜையுடன் பிரசாத் ஸ்டுடியோவில் துவங்கியது. சிநேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, மாளவிகா ஷர்மா, பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், வைபவ் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இதில் இளமையான தோற்றத்தில் விஜய் 10 நிமிடங்களுக்கு வரும் காட்சிகளுக்காக ரூ. 6 கோடிக்கு தொழில்நுட்ப செலவுகள் மட்டுமே செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. லியோ படம் சொதப்பியதால் இந்த படம் வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற வேண்டும் என, இயக்குநர் வெங்கட்பிரபுவிடம் விஜய் கூறியதாக தகவல் உள்ளது.

- Advertisement -

இந்த படத்தின் டைட்டில் வரும் டிசம்பர் 31ம் தேதி இரவு வெளியிடப்படுவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது இரவு 12 மணிக்கு, ஆங்கில புத்தாண்டு பிறக்கும் நேரத்தில் படத்தின் டைட்டில் மற்றும் விஜய் செகன்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியிடப் போவதாக படக்குழு தரப்பில் இருந்து ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்த சூழலில் விஜய் 68 படத்தின் டைட்டில் இதுதான் என்ற தகவல் வேகமாக பரவி வருகிறது, பான் இந்தியா படம் என்பதால் இதற்கு பாஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கரன் பெயரில் ஆர்யா நடித்த படம் உள்ளது. சூர்யா டபுள் ரோலில் நடித்த மாஸ் என பெயர் வைத்து பின்னர் மாசு என்கிற மாசிலாமணி என்ற வெங்கட்பிரபுவின் படம் ஊத்திக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த படம் பான் இந்தியா படமாக இருப்பதால், தமிழில் பெயர் வைக்காமல் ஆங்கிலத்தில் பெயர் வைக்க வேண்டும் என ஏற்கனவே படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால் பாஸ் என்கிற பெயர் வதந்திதான். இன்னும் உறுதியாக முடிவு செய்யப்படவில்லை. மேலும், இந்த படத்தின் டைட்டிலை அறிவிக்கும் போது தேவையான புகைப்படங்களுக்காக ஐதராபாத்தில் விஜய், திரிஷாவுக்காக பிரத்யேகமாக போட்டோ ஷூட் ஒன்றும் சமீபத்தில் நடத்தப்பட்டுள்ளது.

நள்ளிரவில் படத்தின் டைட்டிலை அறிவிக்காமல், வரும் டிசம்பர் 31ம் தேதி மாலையே அதாவது மாலை 6 மணியளவில் டைட்டிலை புத்தாண்டு பரிசாக ரசிகர்களுக்கு அறிவித்து விடலாம் என்றும், அன்றே படத்தின் செகண்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு விடலாம் எனவும் இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர். படத்தின் பெயர் பாஸ் என இருக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்