- Advertisement -
Homeபொழுதுபோக்குமாமன்னன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது இந்த பிரபல நடிகரா? என்னப்பா சொல்றீங்க?

மாமன்னன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது இந்த பிரபல நடிகரா? என்னப்பா சொல்றீங்க?

- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் “மாமன்னன்’. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். மாரி செல்வராஜ்ஜின் வழக்கமான பாணியான சமூக ஏற்றத்தாழ்வை அடிப்படையாக வைத்தே இத்திரைப்படமும் உருவாகியிருந்தது.

மாமன்னன் கதாபாத்திரத்தில் வடிவேலு மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். அவரது நடிப்பு பலரையும் அழுக வைத்தது என்று கூட சொல்லலாம். அந்தளவுக்கு மிகவும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் வடிவேலு. அதே போல் உதயநிதி ஸ்டாலின் இதுவரை நடித்த கதாபாத்திரங்களை ஒப்பிட்டு பார்க்கையில் “மாமன்னன்” திரைப்படத்தில் மிகவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

மேலும் டெரிஃபிக் வில்லனாக பகத் பாசிலும் புரட்சிகர பெண்ணாக கீர்த்தி சுரேஷும் கச்சிதமாக அக்கதாபாத்திரங்களில் பொருந்தியிருந்தார்கள். “மாமன்னன்” திரைப்படத்தின் திரைக்கதை மனதை உருகவைக்கும் திரைக்கதையாக அமைந்திருந்தது. மிகவும் கனம் பொருந்திய கதையம்சத்தை தனித்துவத்தோடு படமாக்கியிருந்தார் மாரி செல்வராஜ். இந்த நிலையில் தற்போது  இத்திரைப்படம் குறித்த அரிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

அதாவது மாரி செல்வராஜ் முதலில் மாமன்னன் கதாபாத்திரத்தில் நடிகர் சார்லியை மனதில் வைத்துத்தான் இந்த கதையை எழுதியிருந்தாராம். அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் இந்த புராஜெக்ட்டிற்குள் வந்த பிறகுதான் இதில் வடிவேலு நடிப்பதாக முடிவு செய்யப்பட்டதாம். இவ்வாறு ஒரு தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி வேடங்களில் நடித்து வரும் சார்லி, சமீப காலமாக நல்ல கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்