- Advertisement -
Homeபொழுதுபோக்குகேம் சேஞ்சர் படத்தின் படுதோல்விக்கு யார் காரணம்? பொங்கி எழுந்த தயாரிப்பாளர் தில் ராஜூ -...

கேம் சேஞ்சர் படத்தின் படுதோல்விக்கு யார் காரணம்? பொங்கி எழுந்த தயாரிப்பாளர் தில் ராஜூ – நேரடியா அவரையே போட்டு தாக்கிட்டாரே?

- Advertisement -

புஷ்பா புஷ்பா 2 படங்களை போல இந்திய அளவில் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் முக்கிய படமாக இருக்கும் என்று பில்டப் செய்யப்பட்ட படம்தான் கேம் சேஞ்சர். தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் ஹீரோவாக நடித்திருந்தார். பாலிவுட் நாயகி கியாரா அத்வானி எஸ்ஜே சூர்யா சமுத்திரக்கனி அஞ்சலி ரமேஷ் ராவ் உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் நடித்த ஆர்ஆர்ஆர் படத்துக்கு பின் 3 ஆண்டுகள் கழித்து வெளியாகும் படம் என்பதால் ரசிகர்களிடமும் கேம் சேஞ்சர் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பும் இருந்தது. படத்துக்கு அனிருத் இசை பெரிய பக்கபலமாக இருக்கும் என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்காக மட்டும் ரூ. 75 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது. படத்தின் இயக்குனர் ஷங்கர் ஏற்கனவே பிரமாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர் என்பதால் கேம் சேஞ்சர் பாக்ஸ் ஆபீஸில் அடித்து நொறுக்கி வசூலில் பட்டையை கிளப்பி விடும் என்று ரசிகர்களும், தெலுங்கு சினிமா துறையும் எதிர்பார்த்தது.

ஆனால் கேம் சேஞ்சர் படம் வெளியான அன்றே படம் பார்த்த ரசிகர்கள், எதிர்பார்த்த அளவுக்கு படத்தில் எந்த விசேஷமும் இல்லை. வழக்கமான ஷங்கர் படங்களில் இதுவும் ஒன்று. இது அவ்வளவு பிரமாதமான படம் எல்லாம் இல்லை என்று படம் குறித்து விமர்சித்தனர். இந்தியன் 2 படம் தோல்விக்கு பிறகு கேம் சேஞ்சர் படமும் படுதோல்வியை சந்தித்தது. 250 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதுகுறித்து கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ கூறியிருப்பதாவது, இந்த படத்தின் தோல்விக்கு கதை தான் காரணம். பட்ஜெட் அல்ல. கதையை காட்டிலும் பட்ஜெட் மற்றும் பிரமாண்டத்தின் மீது அதிக கவனம் செலுத்தியது தவறு. கனமான கதைகள், நம்பிக்கையான இயக்குனர்களை வைத்து எங்கள் நிறுவனம் பலமுறை வெற்றி கண்டுள்ளது.

உச்சத்தில் இருக்கும் ஹீரோ, இயக்குனர்களுடன் கூட்டணி அமைப்பது முக்கியமல்ல. கடந்த சில ஆண்டுகளாக மோசமான பாதையில் பயணித்தோம். இப்போது சங்கராந்தி வஸ்துனம் படத்தின் வெற்றி எங்களுக்கு சரியான பாதையை காட்டி விட்டது. பொய்யான வசூல் நிலவரங்களை தருவது குறித்து மீடியாக்கள்தான் உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர வேண்டும் என்று, தில் ராஜூ நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கிறார். ஷங்கர், ராம்சரண் இருவரும் தான் கேம் சேஞ்சர் படத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் என்று அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்