- Advertisement -
Homeபொழுதுபோக்குசுந்தா் சி - வடிவேலு காம்போவில் உருவான கேங்கர்ஸ் படம், இன்னும் 9 நாட்களில் ரிலீஸ்...

சுந்தா் சி – வடிவேலு காம்போவில் உருவான கேங்கர்ஸ் படம், இன்னும் 9 நாட்களில் ரிலீஸ் – இந்த நேரத்தில் இப்படி ஒரு சிக்கல் வந்துடுச்சே?

- Advertisement -

சுந்தர் சி இயக்கிய பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றிருக்கின்றன. காதல் காமெடி கவர்ச்சி என்ற ஜானரில் தொடர்ந்து பயணித்து வரும் இயக்குனர் சுந்தர் சி அரண்மனை போன்ற திரில் திகில் படங்களையும் தந்து அசத்தி வருகிறார். இப்போது நயன்தாரா நடிப்பில் மூக்குத்தி அம்மன் 2 படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தை ரூ. 120 கோடி பட்ஜெட்டில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

ஆரம்பத்தில் வின்னர் ரெண்டு கிரி போன்ற படங்களில் சுந்தர் சி இயக்கத்தில் காமெடி ரோலில் வடிவேலு நடித்திருந்தார். அதன்பிறகு ஒரு படத்தில் வடிவேலுக்கு தெரியாமல் நடிகர் சந்தானத்தை நடிக்க வைத்ததால் அதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பல ஆண்டுகளாக சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடிக்க மறுத்துவிட்டார்.

- Advertisement -

ஆனால் இப்போது மீண்டும் சுந்தர் சி வடிவேலு காம்போ இணைந்திருக்கிறது, கேங்கர்ஸ் என்ற பெயரில் உருவான இந்த படத்தில் சுந்தர் சி நாயகனாகவும் காமெடி ரோலில் வடிவேலுவும் நடித்திருக்கின்றனர். இதில் விளையாட்டு ஆசிரியராக வடிவேலு நடித்திருக்கிறார். படம் முழுவதும் 5 கெட்டப்புகளில் வடிவேலு இந்த படத்தில் வருகிறார்.

கேங்கர்ஸ் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனத்தை பெற்றுள்ளது. இந்த படத்தில் நாயகியாக கேத்தரின் தெரசா நடித்திருக்கிறார். மேலும் லேடி கெட்டப்பில் இந்த படத்தில் வடிவேலு நடிப்பு வேற லெவலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வருகிற 24ம் தேதி கேங்கர்ஸ் படம் ரிலீஸாக உள்ளது.

- Advertisement -

ஆனால் இப்போது 9 நாட்களே உள்ள நிலையில் கேங்கர்ஸ் படம் ரிலீஸாவதில் புதிதாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது இப்போது வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் குட் பேட் அக்லி படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. கடந்த 10ம் தேதி வெளியான இந்த படம் 5 நாட்களில் இந்த படம் ரூ. 180 கோடியை கடந்துள்ள நிலையில், கேங்கர்ஸ் படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் கேங்கர்ஸ் படத்தை தங்களது தியேட்டரில் திரையிட ஒப்புதல் தந்து இன்னும் தியேட்டர் நிர்வாகங்கள் தரப்பில் புக்கிங் ஆரம்பிக்கவில்லை. குட் பேட் அக்லி படமே நன்றாக ஓடி பெரிய அளவில் வசூலை குவித்து வருவதால் கேங்கர்ஸ் படத்தை தங்களது தியேட்டரில் ரிலீஸ் செய்ய தியேட்டர் உரிமையாளர்கள் அதிக ஆர்வம் காட்டாமல் உள்ளனர். அதனால் போதிய எண்ணிக்கையில் கேங்கர்ஸ் படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்குமா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்