நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர். சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தை தொடர்ந்து அவர் இப்போது புறநானூறு படப்பிடிப்பில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை புறநானூறு படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. சுதா கொங்காரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் நடித்த ஒத்துக் கொண்டு,படத்தின் டைட்டில் அறிவிப்பு விழா நடந்த நிலையில், இன்னும் படப்பிடிப்பு துவங்கப்படவில்லை.
முதல் கட்டப் படப்பிடிப்பு, மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் துவங்க திட்டமிடப்பட்டது. இந்த படத்தின் மையக்கரு இந்தியை எதிர்க்கும் கதை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு மதுரை எம்பி சு வெங்கடேசன்தான் கதை வசனம் எழுதுகிறார். அவர் ஒரு அரசியல்வாதி என்பதை கடந்து ஒரு சிறந்த எழுத்தாளர். நல்ல படைப்பாளி. ஏற்கனவே வேள்பாரி என்ற சரித்திர நாவலை எழுதி, மக்கள் மத்தியில் புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கம்யூனிஸ்ட் வாதியான அவர், இந்தி எதிர்ப்பு குறித்து இந்த படத்தில் திரைக்கதை வசனம் எழுதுகிறார் என்றால், நிச்சயமாக அவருடைய வசனங்கள் மிக வீரியமாகவும், அனல் பறக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் சூர்யாவின் மனைவி இந்தி மொழி பேசும் இஸ்லாமிய பெண் என்பது மட்டும் இன்றி, தனது அடுத்த கட்ட பயணமே பாலிவுட்டை நோக்கித்தான் என்ற நிலையில் இருக்கும் நடிகர் சூர்யா, ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்தின் கதையில் பல வில்லங்கங்களை செய்து வருகிறார்.
அதாவது படத்தின் கதையை மாற்றுங்கள், வசனங்களை மாற்றுங்கள் என ஏதேனும் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தார். இதையடுத்து இந்த படமே வேண்டாம் என்ற முடிவுக்கு டைரக்டர் சுதா கொங்காரா வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவருமே இணைந்து, இந்த படத்தை இப்போதைக்கு எடுக்க முடியாது, ஏனென்றால் இந்த படத்துக்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது என்று அறிக்கையை வெளியிட்டனர். ஆனால் இது இந்த படம் பிரேக்கப் தான் என்று சொல்லப்பட்டது.
சூர்யாவும், எம்பி சு வெங்கடேசனும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், டைரக்டர் சுதா கொங்காரா ஆகியோர் இணைந்து சமீபத்தில் மீட்டிங் நடத்தியுள்ளனர். அப்போதும் சூர்யா விடாப்பிடியாக பலவிதமான திருத்தங்களை, கதையில் மாற்றங்களை சொல்லி குழப்பம் செய்திருக்கிறார். அதனால் டைரக்டர் சொன்ன கதையே வேறு விதமான போக்கில் திசை மாறியிருக்கிறது.
மீண்டும் டென்ஷனான டைரக்டர், அப்படி எல்லாம் கதையை மாற்ற முடியாது என்று கூறியதால், இப்போது மீண்டும் புறநானூறு பழைய நிலைக்கே வந்துவிட்டது. சூர்யா நடிப்பில் புறநானூறு படமே இயக்க வேண்டாம் என சுதா கொங்காரா திட்டவட்டமாக கூறியிருக்கிறார். ஆனால் சமீபத்தில் தனது ரசிகர் மன்ற தலைவர்களை சந்தித்த சூர்யா புறநானூறு, வாடிவாசல் படங்களில் நான்தான் நடிக்கிறேன், கண்டிப்பாக அந்த படங்கள் வரும் என்று பேசியிருக்கிறார். இதையறிந்த நெட்டிசன்கள், சூர்யா உண்மையே பேச மாட்டாரா என வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.





