தமிழ் சினிமாவில் ஹோம்லி நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகை சுஹாசினி. இவர் இயக்குனர் மணிரத்னத்தின் மனைவி என்பதும் நடிகர் சாருஹாசனின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது சித்தப்பா நடிகர் கமல்ஹாசன். நடிகை ஸ்ருதிஹாசனுக்கு இவர் அக்கா என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 1980 90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக சுஹாசினி வலம் வந்தவர். தர்மத்தின் தலைவன் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு மனதில் உறுதி வேண்டும் சிந்து பைரவி என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் வசீகரா போன்ற பல படங்களில் சுஹாசினி நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை சுஹாசினி மணிரத்னம் கூறியதாவது, எனக்கு 6 வயதிலேயே காசநோய் பாதிப்பு இருந்துள்ளது. அதற்கு என் பெற்றோர் தரப்பில் அதிக கவனம் எடுத்து முறையான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அந்த நோயின் பாதிப்பு குறைந்து விட்டது.
எல்லாம் சரியாகி விட்டது என்றுதான் நான் இருந்தேன். ஆனால் 36 வயதில் மீண்டும் எனக்கு காச நோய் வந்துவிட்டது. இதன் காரணமாக திடீரென்று என்னுடைய உடல் எடை கூடிவிட்டது. அது மட்டுமின்றி காதுகள் கேட்கும் திறனிலும் பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. மீண்டும் நான் முறையான மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொண்டேன்.
சிகிச்சைக்கு பிறகு மெல்ல மெல்ல காசநோய் பாதிப்பு குறைந்து குணமாகிவிட்டேன். இதை அப்போது யாருக்கும் தெரியாமல் மறைத்து விட்டேன். வெளியே சொல்வதை கௌரவ குறைவாகவும் நான் நினைத்தேன். 6 மாதங்கள் ரகசியமாகவே இந்த பாதிப்புக்கு நான் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.
அதை இப்போது சமூகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே வெளியே சொல்கிறேன் என்று நடிகை சுஹாசினி மணிரத்தினம் கூறி இருக்கிறார் இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. காச நோய் பாதிப்பு குறித்து வெளியே தெரிந்தால் அது நடிகையான தனக்கு சினிமா வாய்ப்பில் பாதிப்பை தரும் என்று அப்போது அச்சப்பட்ட நடிகை சுஹாசினி இப்போது பட வாய்ப்பின்றி உள்ளதால் இந்த தகவலை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





