- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்துக்கு கிடைத்த மோசமான விமர்சனம்… லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படத்தை தயாரிக்க இருந்த சன்...

கூலி படத்துக்கு கிடைத்த மோசமான விமர்சனம்… லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படத்தை தயாரிக்க இருந்த சன் பிக்சர்ஸ் விலகியதா? – உண்மை நிலவரம் என்ன?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் விக்ரம் கைதி மாஸ்டர் லியோ ஆகிய படங்களை தொடர்ந்து அவர் இயக்கிய படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த இந்த படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. ஆனால் விமர்சன ரீதியாக இந்த படம் தோல்வியடைந்தது.

ரஜினிகாந்த் அமீர்கான் உபேந்திரா சௌபின் சாஹிர் சத்யராஜ் நாகர்ஜூனா ஸ்ருதிஹாசன் ரக்சிதா ராம் சார்லி லொள்ளுசபா மாறன் காளிவெங்கட் என பலர் நடித்த இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து இருந்தார். நடிகை பூஜா ஹெக்டே மோனிகா பாடலுக்கு சிறப்பு நடனமும் ஆடியிருந்தார். கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி இந்த படம் வெளியானது.

- Advertisement -

கூலி படத்தை பொருத்த வரை காட்டு மொக்கையான ஒரு கதைக்களத்தில் படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உருவாக்கி இருந்தார். படம் முழுக்க காட்சிக்கு காட்சி லாஜிக் மிஸ்டே் இருந்ததால் ரசிகர்கள் விரக்தியடைந்தனர். நட்சத்திர நடிகர்கள் பலர் படத்தில் இருந்தும் அவர்களை சரிவர பயன்படுத்தி கொள்ளாமல் அவர் கோட்டை விட்டதாக ரசிகர்களிடையே விமர்சனம் எழுந்தது.

ஆனால் சன்பிக்சர்ஸ் ரஜினிகாந்த் அனிருத் வில்லன் செளபின் சாஹிர் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோர் ஓரளவுக்கு படத்தை தாங்கிப் பிடித்து எப்படியோ மோசமான நஷ்டத்தில் இருந்து படத்தை காப்பாற்றி விட்டனர். அதே நேரத்தில் ஒரு கேப்டனாக கூலி படத்தை மிக மோசமாக உருவாக்கியதில் இயக்குனருக்கே பெரும்பங்கு உண்டு என்பதால் லோகேஷ் கனகராஜ் மீது சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடும் அதிருப்தியில் உள்ளது.

- Advertisement -

இந்த சூழலில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகமாகும் ஒரு புதிய படம் உருவாக உள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்க கமிட் ஆகியிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கூலி படம் தந்த அதிருப்தியால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதில் இருந்து ஒதுங்கி விட்டதாக தகவல் பரவியது.

அதனால் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பாளராகவும் இருப்பதால் அவரது ஜி ஸ்குவார்டு நிறுவனம் மூலம் அவரே இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் வைரலானது. ஆனால் இந்த தகவல் முற்றிலும் வதந்தி. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்ற தகவல் ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்