- Advertisement -
தமிழ் சினிமாவில் புதிய படம் ரிலீஸாகி 4 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் ரிலீஸ் என்பதுதான் இப்போதும் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் 8 வாரங்களுக்கு பிறகுதான் ஓடிடி ரிலீஸ் என்ற விதிமுறையில் இந்தி சினிமா இருந்து வருகிறது. அந்த விதிமுறை காரணமாக, இந்தி வெர்ஷனில் ஜெயிலர் 2 படம் வடமாநிலங்களில் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் ஜெயிலர் 2 படம் ரூ. 1000 கோடி வசூலை எட்ட வாய்ப்பு இருந்தாலும் அமேசான் பிரைம் ஓடிடி ஒப்பந்தம் காணரமாக வட இந்தியாவில் படத்தை ரிலீஸ் செய்வது சிக்கல் நீடிக்கிறது. இதை 8 வாரமாக மாற்றி ஒப்பந்தம் செய்தால், வடமாநிலங்களில் ஜெயிலர் 2 இந்தியில் ரிலீஸ் ஆகும். ஆனால் அமேசான் பிரைம் ஓடிடியில் பேசிய விலையில், 40 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் இதற்கு சம்மதிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.





