- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகையின் அம்மாவை கெட் அவுட் என்று கோபத்தில் கத்திய சுந்தர் சி, காரணம் என்னன்னு தெரிஞ்சா...

நடிகையின் அம்மாவை கெட் அவுட் என்று கோபத்தில் கத்திய சுந்தர் சி, காரணம் என்னன்னு தெரிஞ்சா அசந்துப்போய்டுவீங்க

- Advertisement -

இயக்குனர் சுந்தர் சி தமிழ் சினிமாவின் கமர்சியல் இயக்குனர்களுள் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவரது திரைப்படங்கள் பெரும்பாலும் காமெடி கலந்த டிராமா திரைப்படங்களாகவே இருக்கும். “முறை மாமன்”, “மேட்டுக்குடி”,  “உள்ளத்தை அள்ளித்தா”, “அருணாச்சலம்”, “உனக்காக எல்லாம் உனக்காக”, “அன்பே சிவம்”, “வின்னர்” போன்ற தமிழ் சினிமாவின் மிக பிரபலமான ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர் சுந்தர் சி. இப்போதும் அவரது திரைப்படங்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு.

சுந்தர் சி பல திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். இவர் கதாநாயகனாக நடித்த “தலைநகரம்” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து சமீபத்தில் “தலைநகரம் 2” திரைப்படம் வெளிவந்தது. தற்போது சுந்தர் சி “அரண்மனை 4” திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் சுந்தர் சி, தான் அதிகமாக கோபப்பட்டது குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். சமீபத்தில் ஒரு திரைப்படத்தை சுந்தர் சி இயக்கிக்கொண்டிருந்தாராம்.

அப்போது அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் இணை இயக்குனராக அத்திரைப்படத்தில் பணியாற்றினாராம். அவர் பல ஹிட் திரைப்படங்களை இயக்கியிருக்கிறாராம். இந்த நிலையில் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது அத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகையின் தாயார், அந்த இணை இயக்குனரிடம் தகாத வார்த்தையில் பேசிவிட்டாராம்.

- Advertisement -

தனது நெருங்கிய நண்பனை இப்படி தகாத வார்த்தைகளில் பேசிவிட்டாரே என்று கோபத்தின் உச்சத்துக்கே போய்விட்டாராம் சுந்தர் சி. நடிகையின் தாயாரிடம் கெட் அவுட் என்று கத்திவிட்டாராம். என் வாழ்நாளில் அது போல் தான் என்றும் கோபப்பட்டது இல்லை என்றும் அப்பேட்டியில் சுந்தர் சி கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்