- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவங்க என்னை ஏமாத்தினாங்களா என்று எனக்கு தெரியாது - வெளிப்படையாக சொன்ன இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார்!

அவங்க என்னை ஏமாத்தினாங்களா என்று எனக்கு தெரியாது – வெளிப்படையாக சொன்ன இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார்!

- Advertisement -

இயக்குனர் வசந்தபாலன் இயக்கி இயக்குனராக அறிமுகமான படம் வெயில். இந்த படத்தில்தான் இசையமைப்பாளராக ஜீவி பிரகாஷ்குமாரும் அறிமுகமானார். முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வெற்றி பெற்றார். வெயில் படத்தில் பரத் பசுபதி பாவனா முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

வெயில் படத்தின் வெற்றியை தொடர்ந்து அங்காடித்தெரு கிரீடம் ஆயிரத்தில் ஒருவன் ஆடுகளம் என ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்த பெரும்பாலான படங்கள் சூப்பர் ஹிட் வெற்றிப் படங்களாக அமைந்தன. முன்னணி இசையமைப்பாளராக மாறிய அவர், ஒரு கட்டத்தில் நடிகராகவும் மாறி பல படங்களில் நடித்தார்.

திரிஷா இல்லேன்னா நயன்தாரா சிவப்பு மஞ்சள் பச்சை செம ஜெயில் டார்லிங் குப்பத்து ராஜா என பல படங்களில் நடித்துள்ள ஜீவி பிரகாஷ்குமார் நடிப்பில் அடுத்து கிங்ஸ்டன் என்ற படம் வெளியாக உள்ளது. இசைப்புயல் ஏஆர் ரகுமானின் சொந்த சகோதரி மகன்தான் ஜீவி பிரகாஷ்குமார் என்பது பலரும் அறிந்த தகவல்தான்.

பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட ஜீவி பிரகாஷ்குமார் கடந்தாண்டில் பிரிவதாக அறிவித்தார். இது ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் தொழில் சார்ந்து ஒரு பாடகியாக இன்னும் ஜீவி பிரகாஷ்குமாரின் இசையில் சைந்தவி பாடி வருகிறார் என்பதும் கவனிக்கத்தக்கது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் கூறியதாவது, டிவிட்டரில் யாராவது அண்ணா இது என்னுடைய நம்பர், எனக்கு பணம் வேண்டும் என்று கேட்டால் உடனே நான் அவங்களுக்கு பணம் அனுப்பிவிட்டு ஸ்கிரீன் ஷாட் எடுத்தும் அனுப்பிவிடுவேன்.

அவர்களும் அதற்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்லுவாங்க. இதில் சிலரை நம்பற மாதிரி இருக்கும். சிலரை நம்ப முடியாது. அதில் சிலர் என்னை ஏமாற்றியும் இருக்கலாம், அது எனக்கு தெரியாது என்று ஜீவி பிரகாஷ் குமார் வெளிப்படையாக கூறியிருக்கிறார். கேட்டவுடனே உதவற அந்த மனசு பெரிய விஷயம் சார் என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

சற்று முன்