- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென மூக்குத்தி அம்மன் 2 பிரமோ ஷூட் நடத்திய இயக்குனர் சுந்தர் சி, மிரண்டு போன...

திடீரென மூக்குத்தி அம்மன் 2 பிரமோ ஷூட் நடத்திய இயக்குனர் சுந்தர் சி, மிரண்டு போன தயாரிப்பாளர் – வெளியான முக்கிய தகவல்!

- Advertisement -

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகை நயன்தாரா அம்மனாக நடித்த படம் மூக்குத்தி அம்மன். இந்த படம் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்ற படமாகும். இந்த படத்தில் நாயகனாக ஆர்ஜே பாலாஜியே நடித்திருந்தார். தொடர்ந்து மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை அவர் இயக்கவில்லை.

ஆனால் இப்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்குனர் சுந்தர் சி டைரக்ட் செய்து வருகிறார். இதில் மீண்டும் கதாநாயகியாக அம்மனாக நடிகை நயன்தாரா தான் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் இனியா ரெஜினா கசாண்ட்ரா துனியா விஜய் யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

- Advertisement -

கடந்த 3 மாதங்களுக்கு மேலாக மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், ஏற்கனவே வந்த படம் மூக்குத்தி அம்மன். அப்போது சின்ன பட்ஜெட்டில்தான் இந்த படம் உருவானது. இப்போது எதற்காக 120 கோடி ரூபாய் என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க வேண்டும்? இது வீண் செலவுதானே என்று ஒரு தரப்பினர் மத்தியில் எதிர்மறை விமர்சனம் கிளம்பியுள்ளது.

இந்த விமர்சனம், இயக்குனர் சுந்தர் சி காதுகளுக்கும் வந்துள்ளது. இதையடுத்து அவர் சமீபத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பிரமோ ஷூட் நடத்தி டீசர் ஒன்றை தயாரித்துள்ளார். சமீபத்தில் அந்த டீசரை படத்தை தயாரித்து வரும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் போட்டு காட்டியிருக்கிறார்.

- Advertisement -

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டீசரை பார்த்து ஐசரி கணேஷ் மிகவும் அசந்து இருக்கிறார். டீசரிலேயே பல காட்சிகளில் சுந்தர் சி மிரட்டியிருப்பது கண்டு அவரை ஐசரி கணேஷ் பாராட்டியும் இருக்கிறார். ஏற்கனவே அரண்மனை படங்களை திகில் கதைக்களத்தில் இயக்கி அசத்திய சுந்தர் சி இந்த முறை பக்தி களத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அவர் இயக்கி வரும் மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து, தனது காதுகளுக்கு வந்த எதிர்மறை விமர்சனம், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் காதுகளுக்கும் சென்றால் ஒரு தயாரிப்பாளராக அவர் குழப்பம் அடைவாரே என்பதற்காகவே இந்த டீசரை அவசரமாக உருவாக்கி ஐசரி கணேஷ் கவனத்துக்கு சுந்தர் சி கொண்டு சென்றிருக்கிறார். இதே டீசரை தீபாவளி நேரத்தில் ரசிகர்களுக்கு வெளியிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்