- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருநெல்வேலிகாரங்க ரொம்ப பாசக்காரங்க... ரஜினிகாந்த் நெகிழ்ச்சி... லியோ பற்றி தலைவரு சொன்னதுதான் ஹைலைட்டே...

திருநெல்வேலிகாரங்க ரொம்ப பாசக்காரங்க… ரஜினிகாந்த் நெகிழ்ச்சி… லியோ பற்றி தலைவரு சொன்னதுதான் ஹைலைட்டே…

- Advertisement -

அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிப்பதில் தற்போது ஆர்வம் காட்டி வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நெல்சன் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றியைக் கண்ட ஜெயிலர் திரைப்படம் ரஜினிகாந்த்க்கு புது உத்வேகத்தை கொடுத்திருக்க, அவர் மீண்டும் பம்பரம் போல் சூழ ஆரம்பித்துள்ளார்.

சமீபத்தில் ஜெயிலர் பட வெற்றி விழாவின்போது பேசிய ரஜினிகாந்த், இந்தப் படத்தை விட மிகப்பெரிய வெற்றியை எப்படி கொடுக்கப் போகிறோம் என்று நான்கு ஐந்து நாட்கள் சிந்தித்ததாக தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், லைக்கா நிறுவனம் ரஜினிகாந்துடன் இரண்டு படங்களில் ஒப்பந்தம் போட்டது.

அதில் ஒன்று லால் சலாம் திரைப்படம். ரஜினியின் மகளாகிய ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு சிறப்பு தோற்றமாம். மொய்தீன் கான் எனும் கதாபாத்திரத்தில் அவர் வருகிறாராம். இது தொடர்பாக வெளியாகி இருந்த முதல் போஸ்டர் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவரவில்லை.

இருந்தாலும் கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் ஒரு சின்ன ஆர்வம் இருந்து தான் வருகிறது. பொங்கலன்று வெளியாகும் இந்த படத்தின் விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, லைக்கா நிறுவன தயாரிப்பில் ஜெய் பீம் ஞானவேலுடன் சூப்பர் ஸ்டார் இணைந்துள்ளார்.

இதில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், மலையாள நடிகர் பகத் பாசில், தெலுங்கு நடிகர் ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் உள்ளன. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அடுத்ததாக கன்னியாகுமரி மற்றும் நெல்லையில் சூட்டிங் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் தூத்துக்குடி விமான நிலையம் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1977 ஆம் ஆண்டு வெளியான புவனா ஒரு கேள்விக்குறி திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் 46 ஆண்டுகளுக்கு பின்னர் இங்கு வந்திருப்பதாக தெரிவித்தார். இந்த ஊர் மக்கள் பாசக்காரர்கள் என்றும், அவர்கள் அனைவருடனும் போட்டோ எடுக்கத்தான் முடியவில்லை எனவும் சூப்பர் ஸ்டார் கூறினார். அதுமட்டுமல்லாமல் தளபதி விஜயின் லியோ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைய தான் வாழ்த்துவதாகவும் சூப்பர் ஸ்டார் குறிப்பிட்டார்.

சற்று முன்