- Advertisement -
Homeபொழுதுபோக்குவெளிநாட்டில் ஷூட்டிங் ஸ்பாட்டில் காத்திருந்த படக்குழு… ஓட்டல் அறையில் 3 நாட்கள் மட்டையான பிரபல இயக்குனர்...

வெளிநாட்டில் ஷூட்டிங் ஸ்பாட்டில் காத்திருந்த படக்குழு… ஓட்டல் அறையில் 3 நாட்கள் மட்டையான பிரபல இயக்குனர் – இப்போ அவர் தத்துவ மழை பொழியறாரே?

- Advertisement -

இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன் செல்வராகவன். தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். இப்போது நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். கஸ்தூரி ராஜாவின் இளைய மகன் நடிகர் தனுஷ். அவர் இப்போது நடிப்பது மட்டுமின்றி தனது அப்பா மற்றும் அண்ணன் போலவே இயக்குனராகவும் மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

7ஜி ரெயின்போ காலனி என்ற படத்தை டைரக்ட் செய்த போது இயக்குனர் செல்வராகவன், அந்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் சில ஆண்டுகளில் அவர்கள் பிரிந்து விட்டனர். அதன்பிறகு கீதாஞ்சலி என்பவரை இயக்குனர் செல்வராகவன் 2வது திருமணம் செய்துக்கொண்டார்.

இயக்குனர் செல்வராகவன், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் வலைதள பக்கங்களில் தத்துவங்களை பேசி வீடியோ வெளியிடுவார். அது வாழ்க்கை சார்ந்த தத்துவங்களாக தான் பெரிதும் இருக்கும். அதே நேரத்தில் அவர் தெளிவாக இருந்துக்கொண்டு இந்த தத்துவங்களை பதிவிடுகிறாரா, அல்லது போதையில் தத்துவமாக பதிவிடுகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுவது உண்டு.

ஆனால் உண்மையில், அவர் தெளிவான மனநிலையில் இருந்துக்கொண்டு தான் இந்த தத்துவங்களை தனது ரசிகர்களுக்காக வெளியிடுகிறார். உண்மையில் அவர் மதுப்பழக்கத்தை விட்டு பல நாட்களாகிறது. அவர் ஆரம்பத்தில் போதை பழக்கத்தில் இருந்தாலும் அவர் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டு நீண்ட காலமாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் குறித்து வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியதாவது, கடந்த 2016ம் ஆண்டில் அஜர்பைஜானில் மன்னவன் வந்தானடி என்ற படத்தின் ஷூட்டிங் நடந்தது. இந்த படத்தின் இயக்குனர் செல்வராகவன், கதாநாயகன் சந்தானம். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் படக்குழு காத்திருந்த போது இயக்குனர் செல்வராகவன், அங்கு வரவே இல்லை. ஓட்டல் அறையிலேயே இருந்து விட்டார்.

ஓட்டல் அறையில் ஃபுல்லாக குடித்துவிட்டு மட்டையாகி கவிழ்ந்து படுத்து தூங்கி விட்டார். 3 நாட்களாகியும் அவரை எழுப்ப முடியவில்லை. அதன்பிறகு சென்னையில் இருந்து செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியை டிக்கெட் போட்டு அஜர்பைஜானுக்கு வரவழைத்தனர். அதன்பிறகு ஓட்டலுக்கு சென்று அவர் செல்வராகவனை எழுப்பி ஷூட்டிங்குக்கு அழைத்து வந்தார். என்றாலும் அந்த படம் இதுவரை வெளியாகவில்லை. அந்த தயாரிப்பாளருக்கு ஏழெட்டு கோடி ரூபாய் வரை நஷ்டம். இப்போது திருந்திய செல்வராகவன் 10 ஆண்டுகளுக்கு முன்பே திருந்தியிருந்தால், இன்னும் புகழின் உச்சியில் அவர் இருந்திருப்பார் என்று அந்த வீடியோவில் ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.

சற்று முன்