- Advertisement -
Homeபொழுதுபோக்குபட்டையை கிளப்பும் சூர்யா 43 அறிவிப்பு.. அடுத்த ஹிட்டை பார்சல் செய்யுங்க..பெயர் வேற லெவல்

பட்டையை கிளப்பும் சூர்யா 43 அறிவிப்பு.. அடுத்த ஹிட்டை பார்சல் செய்யுங்க..பெயர் வேற லெவல்

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சூர்யா சமீபகாலமாக தேர்ந்தெடுத்து கதைகள் அனைத்தும் தரமானதாக இருக்கின்றன. அந்த வகையில் அவர் நடித்த சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை கூறி ஆரோக்கியமான விவாதத்தை கிளப்பியது குறிப்பிடத்தக்கது. சூர்யா அவ்வாறு தொடர்ந்து நடிப்பதை கவனித்த பலரும் சூர்யா போலவே மற்ற முன்னணி ஹீரோக்களும் சமூக கருத்துள்ள படங்களில் நடிக்க வேண்டும் என கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படமும் பொள்ளாச்சி சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவானது. ஆனால் அந்தப் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. பாண்டிராஜ் அந்தப் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. படம் ஹிட்டாகவில்லையென்றாலும் விமர்சன ரீதியாக ஓரளவுக்கு நல்ல ரெஸ்பான்ஸையே பெற்றது.

- Advertisement -

அந்தப் படத்துக்கு பிறகு சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்துவருகிறார். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு சிவா இந்தப் படத்தை இயக்குகிறார். ஞானவேல் ராஜா பிரமாண்ட பட்ஜெட்டில் படத்தை தயாரிக்கிறார். திஷா பதானி ஹீரோயினாக நடிக்க தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். குறிப்பாக இந்தப் படம் 3டி தொழில்நுட்பத்தில் மொத்தம் பத்து மொழிகளில் உருவாகிறது.

அண்ணாத்த தோல்வியால் சூர்யாவை வைத்து கங்குவாவில் சிவா என்ன செய்யப்போகிறாரோ என்ற கவலை சூர்யா ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் அந்த கவலை எல்லாம் படத்தின் க்ளிம்ப்ஸ் பார்க்கையில் காணாமல் போனது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் விரைவில் படம் வெளியாகவிருக்கிறது.

- Advertisement -

இந்த சூழலில் சூர்யாவின் 43ஆவது படம் குறித்த புதிய தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே ஓடிக்கொண்டிருந்தன. இந்நிலையில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்க சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு புறநானூறு என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

மேலும் ஒரு வருடமும் பெயரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் அது என்ன வருடம் என்று டைட்டில் டீசரில் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கனவே சுதா கொங்கராவும், சூர்யாவும் இணைந்த சூரரைப் போற்று திரைப்படம் மெகா ஹிட்டாகி தேசிய விருதுகளை அள்ளியது. அதன் காரணமாக் நிதப் படத்தின் மீதும் ரசிகர்களுக்கு உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

- Advertisement -

சற்று முன்