ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை துவங்கியவர் ஆர்ஜே பாலாஜி. ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் சில படங்களில் நடித்தார். அதன் பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஆர் ஜே பாலாஜியின் நான் ஸ்டாப் பேச்சுக்கு ரசிகர்கள் அதிக அளவில் குவிந்தனர்.
அதன்பின் ஒரு கட்டத்தில் ஆர்.ஜே பாலாஜி தமிழ் சினிமாவில் கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார். எல்கேஜி படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றுத் தந்தது. அதன் பிறகு ஆர்.கே. பாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. இதில் மூக்குத்தி அம்மன் கேரக்டரில் நடிகை நயன்தாரா நடித்திருந்தார்.
மூக்குத்தி அம்மன் படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து சத்யராஜ், ஊர்வசி பிரதான கேரக்டர்களில் நடித்த வீட்ல விசேஷம் படமும் ஆர்ஜே பாலாஜிக்கு ஒரு முக்கிய படமாக அவரது கேரியரில் அமைந்தது. அதை தொடர்ந்து சிங்கப்பூர் சலூன் என்ற படத்திலும் ஆர் ஜே பாலாஜி நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.
இதையடுத்து நடிகர் விஜய் நடிக்கும் 69வது படத்தை ஆர் ஜே பாலாஜிதான் இயக்க உள்ளார் என்ற ஒரு தகவல் பரவியது. அதேபோல் நடிகர் விஜயை நேரில் சந்தித்து ஆர்கே பாலாஜி கதையும் சொன்னார். ஆனால் கதை தனக்கு பிடித்திருந்தாலும், அந்த கதையில் நான் நடித்தால் அது சரியாக வராது என்று விஜய் மறுத்துவிட்டார்.
இதையடுத்து தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கும் ஒரு புதிய படத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறார். இது நடிகர் விஜய் நடிக்க மறுத்த கதைதான் என்றும் இது ஆண் தெய்வம் பற்றிய கதை, ஆன்மிக களத்தை மையமாகக் கொண்டது என்றும் கூறப்படுகிறது. இந்த சூர்யா 45 படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் ஊட்டி, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் துவங்க இருக்கிறது.
இதற்கிடையே சூர்யா 45 படத்தில் கதாநாயகியாக காஷ்மீரா பர்தேஷி கமிட் செய்யப்பட்டுள்ளார். இவர் சிவப்பு மஞ்சள் பச்சை படத்தில் ஜீவி பிரகாஷ்குமாருக்கு ஜோடியாக நடித்தவர்.இப்போது பிரபல கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் மிக முக்கியமான கேரக்டரில் பிரதான நாயகியாக ஒரு முன்னணி நடிகையை ஆர்ஜே பாலாஜி தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. நயன்தாரா, திரிஷா, அனுஷ்கா போன்று ஒரு முன்னணி நடிகை இந்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளது. இப்படி மூன்று நாயகிகள் இந்த படத்தில் நடிப்பதால், சூர்யா எத்தனை கேரக்டர்களில் வரப்போகிறார் என்பதில் ரசிகர்களுக்கு சஸ்பென்ஸ் நீடிக்கிறது.





