தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சூர்யா நடித்த கங்குவா படம், வருகிற நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்த படம், மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. முதல் பாகமாக வரும் கங்குவா, அடுத்த ஆண்டில் 2ம் பாகமாகவும் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
கங்குவா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படம் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இந்த சூழ்நிலையில் அடுத்ததாக இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் சூர்யா நடிக்கிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இந்த படத்தை மூக்குத்தி அம்மன் வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களை இயக்கிய நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்குகிறார். இந்த படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
சூர்யா 45 படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மூக்குத்தி அம்மன் படத்தின் 2ம் பாகமாக மாசாணி அம்மன் என்ற படத்தை ஆர்கே பாலாஜி இயக்க முடிவு செய்தார். ஆனால், அந்த படத்தில் நடிகை நயன்தாராவுக்கு பதிலாக திரிஷா கதாநாயகியாக நடிக்க ஆர் ஜே பாலாஜி திட்டமிட்டார்.
இதற்கிடையே மூக்குத்தி அம்மன் படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மீண்டும் நயன்தாராவே அம்மனாக நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தை தயாரிப்பதாக அறிவித்தது. இந்த படத்தை சுந்தர் சி இயக்குவதும் பின்னர் உறுதியானது. அதனால் மாசாணி அம்மன் படத்தை பெண்டிங்கில் வைத்த ஆர்.ஜே பாலாஜி, அந்த படத்தின் கதையில் வரும் பெண் தெய்வத்தையே ஆண் தெய்வமாக மாற்றி ஒரு புதிய கதையை உருவாக்கி இருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன் நடிகர் விஜய்யிடம், இந்த ஆண் தெய்வம் கதையை தான் ஆர்ஜே பாலாஜி சொன்னார். கதை நன்றாக இருப்பதாக சொன்ன விஜய், ஆனால் இந்த கதையில் நான் நடித்தால் நன்றாக இருக்காது என்று மறுத்துவிட்டார். அதன் பிறகுதான் அவர் எச் வினோத் இயக்கும் படத்தில் தளபதி 69 படத்தில் நடிக்க கமிட்டானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் விஜயிடம் சொன்ன ஆண் தெய்வம் பற்றிய அந்த கதையில்தான் நடிகர் சூர்யா இப்போது நடிக்கிறார் என்பது தெளிவாகியுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டரிலும் வேல் அரிவாள் கம்பு என பக்தியை சொல்லும் விதமான அந்த புகைப்படம் வெளியாகி, இது நிச்சயமாக பக்தி சார்ந்த ஒரு படம் தான் என்பதை மறைமுகமாக கூறிஇருந்தது. அதனால் சூர்யா 45வது படம் ஆண் தெய்வம் பற்றிய கதையை மையமாகக் கொண்டதாக இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. நிச்சயமாக இது கன்னடத்தில் வந்த காந்தாரா படம் போல, தமிழில் வரும் மிகப்பெரிய ஹிட் படமாக இது சூர்யாவுக்கு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





