- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது தீபாவளிக்கு அண்ணனும் தம்பியும் நேரடியாக களத்தில் மோதுகிறார்களா... அடடே இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே......

என்னது தீபாவளிக்கு அண்ணனும் தம்பியும் நேரடியாக களத்தில் மோதுகிறார்களா… அடடே இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே… தாங்குமா தமிழ் சினிமா…

- Advertisement -

சூர்யா தற்போது ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அவரின் 44 ஆவது படமாக இது உருவாகி இருக்கிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, கருணாகரன், ஜோ ஜூ ஜார்ஜ், பிரகாஷ் ராஜ், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அண்மையில் வெளியான இதன் டீசர் பலரையும் கவர்ந்தது.

சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கனிமா பாடல் வெளியானது. அது இணையத்தில் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. குறிப்பாக, சூர்யா மற்றும் பூஜாவின் நடன அசைவுகள் பலரையும் கவர்ந்தன. பலரும் அவர்களைப் போன்று நடனமாடி இணையத்தில் வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றனர்.

இப்படி ஆரம்பத்திலேயே ரெட்ரோ திரைப்படம் பலரது எதிர்பார்ப்பையும் தூண்டி இருக்கிறது. இதைத்தொடர்ந்து தனது 45 வது திரைப்படத்திற்காக ஆர் ஜே பாலாஜி உடன் கைகோர்த்து இருக்கிறார் சூர்யா. இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. படத்தில் கதாநாயகியாக வருகிறார் திரிஷா.

இது ஆன்மீகம் கடந்த ஒரு ஃபேண்டஸி படம் என்று சொல்கிறார்கள். படத்தில் கருப்பசாமி வேடம் மற்றும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா வருவதாகவும் தெரிகிறது. சொல்லப்போனால் நீதிமன்ற காட்சிகள் அதிகம் இருக்கும் என கூறப்படுகிறது. ஆர் ஜே பாலாஜியும் வில்லனாக வருகிறாராம்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தற்போது பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்தான் பாடல்களுக்கு மெட்டு போட்டு வருகிறார். இதன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் சூழலில், தீபாவளிக்கு திரைப்படம் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் கார்த்தி நடித்திருக்கும் சர்தார் படத்தின் இரண்டாம் பாகமும் தீபாவளியை தான் குறி வைத்துள்ளது.

ஏற்கனவே இதன் முதல் பாகம் 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக இதையும் தீபாவளி பண்டிகைக்கு வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பி எஸ் மித்திரன் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் வில்லனாக வருகிறார் எஸ் ஜே சூர்யா. அண்மையில் இதன் டீசர் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படி ஒரே நாளில் சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தி ஆகியோரின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதாக வெளியாகி இருக்கும் தகவல் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

சற்று முன்