- Advertisement -
Homeபொழுதுபோக்குவாடிவாசல் படத்தில் அமீருடன் நடிப்பது குறித்து பேசிய சூர்யா, அதற்கு இயக்குநர் வெற்றிமாறன் சொன்ன பதில்...

வாடிவாசல் படத்தில் அமீருடன் நடிப்பது குறித்து பேசிய சூர்யா, அதற்கு இயக்குநர் வெற்றிமாறன் சொன்ன பதில் – சூர்யா எடுத்த அதிரடி முடிவு?

- Advertisement -

இயக்குநர் வெற்றிமாறன், தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியமான இடத்தில், கவனிக்கப்படும் நட்சத்திர இயக்குநராக இருக்கிறார். சில ஹீரோ நடிகர்களை வைத்து படம் இயக்கினால், இயக்குநர்களுக்கு பெரிய ஸ்டார் இயக்குநர் என்ற பெயர், புகழ் கிடைக்கும். ஆனால் சிறந்த படைப்பாளியான வெற்றிமாறன் போன்ற இயக்குநர்களின் படங்களில் நடிப்பதால், நல்ல கலைஞன் என்ற பெயர் அந்த நடிகருக்கு கிடைக்கும்.

அந்த வகையில், வெற்றிமாறன் படங்களில் நடிக்க நடிகர், நடிகையர் ஆர்வம் காட்டுகின்றனர். ஏனென்றால் அவர் இயக்கும் படத்தில் நடிப்பது அவர்களது சினிமா பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக, மாற்றமாக, முன்னேற்றமாக அமையும். அதற்கு சிறந்த உதாரணமாக தனுஷை குறிப்பிட்டுச் சொல்லலாம். சமீபத்தில் நடிகர் சூரியை சொல்லலாம்.

- Advertisement -

நீண்ட காலமாக வாடிவாசல் படம், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். மிக முக்கியமான ஒரு கேரக்டரில் இந்த படத்தில் இயக்குநர் அமீர் நடிக்கிறார். ஏற்கனவே வடசென்னை படத்தில் அமீர் நடித்திருந்தார். அந்த கேரக்டரில் அமீரின் நடிப்பு மிக சிறப்பாக பேசப்பட்டது.

இப்போது பருத்திவீரன் படத்தயாரிப்பு விவகாரத்தில் அமீரை தரக்குறைவாக ஞானவேல்ராஜா பேசியிருந்தார். இது, தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பாரதிராஜா, சமுத்திரக்கனி, சசிக்குமார், கரு பழனியப்பன் போன்றவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கஞ்சா கருப்பு போன்றவர்கள் குருவை மதிக்க தெரியாத சிஷ்யர்கள் என சூர்யா, கார்த்தியையும் திட்டியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில், வாடிவாசல் படத்தில் அமீர் நடிப்பது சூர்யாவுக்கு பிடிக்கவில்லை. இதனால், வெற்றிமாறனிடம் சூர்யா இதுகுறித்து பேசி இருக்கிறார். அமீர் நடிக்கும் கேரக்டரில் மலையாள நடிகர் மோகன்லால் நடித்தால் நன்றாக இருக்கும். நான் மோகன்லாலிடம் பேசி தேதி வாங்கி தருகிறேன் எனக் கூறியிருக்கிறார்.

இதைக்கேட்ட வெற்றிமாறன், இந்த படத்தை எடுக்கிற இயக்குநர் நான். எந்த கேரக்டரில் யார் நடிக்க வேண்டும் என்பது எனக்குத்தான் தெரியும். நீங்கள் இதில் தலையிட வேண்டாம். அந்த கேரக்டரில் அமீர் மட்டுமே நடிப்பார். அதுதான் சரியாக இருக்கும். அமீருடன் நடிக்க விருப்பம் இல்லை எனில், நீங்கள் படத்தை விட்டு விலகிக்கொள்ளுங்கள் என கூலாக சொல்லி இருக்கிறார். இதையடுத்து அதிர்ச்சியில் உறைந்து போன சூர்யா, வாடிவாசல் படத்தை விட்டு விலகும் முடிவுக்கு வந்துவிட்டதாக பரபரப்பாக பேசப்படுகிறது. ஓரிரு தினங்களில் அறிவிப்பு வெளியாகலாம்.

- Advertisement -

சற்று முன்