- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யா, வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் உருவாக வாய்ப்பு? - சிம்பு படம் டிராப் என்பதால்...

நடிகர் சூர்யா, வெற்றிமாறன் கூட்டணியில் வாடிவாசல் உருவாக வாய்ப்பு? – சிம்பு படம் டிராப் என்பதால் தயாரிப்பாளர் எடுத்த புது முடிவு – ஆனா இதுல ஒரு டிவிஸ்ட் இருக்குது!

- Advertisement -

தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தம் போடப்பட்ட படம் வாடிவாசல். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே வாடிவாசல் படம் உருவாக திட்டமிட்ட நிலையில் சூர்யா, வெற்றிமாறன் ஏற்கனவே கமிட் ஆன படங்களில் பிஸியாக இருந்ததால் வாடிவாசல் படப்பிடிப்பை துவங்க முடியவில்லை.

இந்த சூழலில் கங்குவா ரெட்ரோ படங்களில் நடிகர் சூர்யா நடித்து முடித்த நிலையில், அடுத்த படம் வாடிவாசல்தான் என்று கோலிவுட்டில் தகவல் பரவியது. அதே போல் விடுதலை விடுதலை 2 படங்களை இயக்குனர் வெற்றிமாறனும் இயக்கி முடித்த நிலையில், அவரும் வாடிவாசல் படப்பிடிப்புக்கு தயாராகி விட்டார்.

- Advertisement -

வாடிவாசல் படத்துக்காக ஏற்கனவே இயக்குனர் வெற்றிமாறனுக்கு ரூ. 18 கோடி வரை தாணு சம்பளமாக தந்துவிட்டார். அதே போல் நடிகர் சூர்யாவுக்கும் ஒரு பெரிய தொகை சம்பளமாக தரப்பட்டுள்ளது. ஆனால் வாடிவாசல் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க மாட்டேன், படத்தை எப்போது துவங்கி எப்போது முடிப்பீர்கள் என எனக்கு ஒப்பந்தத்தில் எழுதி தர வேண்டும்.

அதற்கு முன்பாக படத்தின் முழு ஸ்கிரிப்ட் எனக்கு தந்தாக வேண்டும் என நடிகர் சூர்யா, இயக்குனர் வெற்றிமாறனுக்கு பல கண்டிஷன்களை போட்டிருக்கிறார். இது நமக்கு சரியாக வராது என்பதை புரிந்துக்கொண்ட இயக்குனர் வெற்றிமாறன், வாடிவாசல் படமே வேண்டாம் என டிராப் செய்துவிட்டார். அதே நேரத்தில் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கும் ஒரு படத்தில் சூர்யா ஒரு படத்தில் நடிப்பது, அதே போல் தாணு தயாரிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்குவது என்றும் முடிவானது.

- Advertisement -

இந்த சூழலில்தான் சிம்பு நடிக்கும் வடசென்னை கதைக்களத்தில் ஒரு படத்தை இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டார். அதற்காக நடிகர் சிம்புவை வைத்து பிரமோ ஷூட்டும் எடுத்தார். ஆனால் நடிகர் சிம்பு ரூ. 30 கோடி வரை சம்பளம் கேட்பது மட்டுமின்றி பிராபர்டி ஷேரும் கேட்கிறார். அதனால் தயாரிப்பாளர் தாணு இந்த படத்தை டிராப் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதே படத்தை சித்தாரா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க சிம்பு தரப்பில் பேசி வருகின்றனர்.

அதே நேரத்தில் ஏற்கனவே ரூ. 18 கோடி சம்பளம் வாங்கிவிட்ட இயக்குனர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் தாணுவுக்கு ஒரு படம் பண்ணியாக வேண்டிய சூழல் இருப்பதால், சூர்யா நடிக்கும் ஒரு படத்தை வெற்றிமாறன் இயக்கவும் ஆனால் வாடிவாசல் என தலைப்பு இருந்தாலும் இது ஒரு வேறு கதைக்களத்தில் நடக்கும் கதையாக இருக்கும், முதலில் எடுக்க இருந்த கதைக்களம் அல்ல என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு சூர்யா, வெற்றிமாறன் ஒத்துக்கொள்வார்களா என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது.

- Advertisement -

சற்று முன்