- Advertisement -
Homeபொழுதுபோக்குதிடீரென நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட இயக்குனர் அமீர் நடிகர் சூர்யா - அப்போது நடந்தது என்ன?...

திடீரென நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட இயக்குனர் அமீர் நடிகர் சூர்யா – அப்போது நடந்தது என்ன? – வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அமீர். சூர்யா திரிஷா லைலா நந்தா உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை பெற்றது. இன்னும் மௌனம் பேசியதே படம் இளம் காதலர்கள் விரும்பும் ஒரு காதல் படமாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது.

நடிகர் சிவக்குமாரின் இளைய மகன் நடிகர் கார்த்தி நடித்த முதல் படம் பருத்திவீரன். இந்த படத்தை இயக்குனர் அமீர் சொந்தமாக அவரது செலவில் தயாரித்தார். இந்த படத்தை தயாரித்த வகையில் ஏற்பட்ட பண பிரச்னையால் சூர்யாவுக்கும் அமீருக்கும் இடையே கருத்து வேறுபாடும் மனக்கசப்பும் ஏற்பட்டது. அதனால் பல ஆண்டுகளாக அவர்கள் பேசிக்கொள்ளாமல் இருந்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பருத்தி வீரன் படம் தயாரிப்பு பண விஷயத்தில் சூர்யாவின் நெருங்கிய உறவினர் ஞானவேல் ராஜா, இயக்குனர் அமீர் குறித்து தவறாகவும் இழிவாகவும் பேசியதும் அதற்கு தமிழ் சினிமா இயக்குனர்கள் பாரதிராஜா கரு பழனியப்பன் சேரன் சமுத்திரக்கனி சசிக்குமார் போன்றவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்கள் ரி ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் இப்போது மௌனம் பேசியதே படமும் ரி ரிலீஸ் செய்யப்பட்டு 3 வாரங்களை கடந்துள்ளது. இந்த படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

மௌனம் பேசியதே படத்தின் தயாரிப்பாளர் அபராஜித் பிலிம்ஸ் கணேஷ் ரகு, அமெரிக்காவில் இருந்த நிலையில், இப்போது சென்னை வந்துள்ளார். அப்போது நடிகர் சூர்யாவை நேரில் அழைத்து பேசியிருக்கிறார். அப்போது நடிகர் சூர்யாவே இயக்குனர் அமீருக்கு போன் செய்து நேரில் வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். பிறகு அவரும் நேரில் வந்த நிலையில் மூவரும் மணிக்கணக்கில் பேசியிருக்கிறார்கள்.

பல ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பாளர் கணேஷ் ரகு முன்னிலையில் சந்தித்துக்கொண்ட அமீரும் சூர்யாவும் 3 மணி நேரத்துக்கு மேல் மனம் விட்டு பேசியிருக்கின்றனர். இதனால் அவர்களது பழைய விவகாரங்கள் எல்லாம் மறைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கணேஷ் ரகு தயாரிக்கும் 2 படங்களில் ஒன்றை இயக்குனர் அமீர் இயக்குகிறார். மேலும் ஒரு படத்தில் நடிகர் சூர்யா ஹீரோவாக நடிப்பதாகவும் முடிவாகி உள்ளது.

சற்று முன்