- Advertisement -
Homeபொழுதுபோக்குமகிழ்திருமேனிக்கு அதிரடியாக கண்டிசன் போட்ட நடிகர் அஜீத்குமார், விடாமுயற்சி ஏற்படுத்திய திடீர் திருப்பம் - ரசிகர்களின்...

மகிழ்திருமேனிக்கு அதிரடியாக கண்டிசன் போட்ட நடிகர் அஜீத்குமார், விடாமுயற்சி ஏற்படுத்திய திடீர் திருப்பம் – ரசிகர்களின் கனவு நனவாகுமா?

- Advertisement -

கடந்த 2023ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது அஜீத்குமார் நடித்த துணிவு திரைப்படம். எச் வினோத் இயக்கிய இந்த படம் மாஸ் ஹிட்டாக அஜீத்குமாருக்கு அமைந்தது. இந்த படம் ரிலீஸான போதுதான் விஜய் நடித்த வாரிசு படமும் வெளியானது. ஆனால் துணிவுதான் மாஸ் ஆக ரசிகர்களுக்கு பிடித்தது. என்றாலும் பேமிலி சப்ஜெக்ட் படமாக இருந்ததால் வாரிசு படமும் வசூலை குவித்தது.

வாரிசு படத்தை தொடர்ந்து விஜய் நடித்த லியோ படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்கள் வந்தாலும் இந்த படம் 600 கோடி ரூபாய் வசூலில் சாதனை படைத்தது. அதன்பிறகு வெங்கட்பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ரஷ்யாவில் நடக்கிறது. அத்துடன் ஷூட்டிங் முடிவடைகிறது.

- Advertisement -

ஆனால் விடாமுயற்சி படப்பிடிப்பு பல மாதங்கள் தாமதமாக கடந்தாண்டு அக்டோபரில் அஜர்பைஜானில் துவங்கியது. ஆரம்பம் முதலே ஏகப்பட்ட தடைகள், பிரச்னைகள், இயற்கை சீற்றங்கள், கலை இயக்குனர் மறைவு, பைனான்ஸ் பிரச்னை என தொடர்ந்து பிரச்னைகள் விடாமுயற்சியாக நீடித்ததால், ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

லைகா புரடக்சன் தயாரிப்பு நிறுவனம் ரஜினி நடிக்கும் வேட்டையன் படத்தையும், அஜீத்குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தையும் ஒரே நேரத்தில் தயாரிப்பதால் நிதி பிரச்னை ஏற்பட்டதால், கடந்த 2 மாதங்களாக விடாமுயற்சி படப்பிடிப்பு சுத்தமாக நிறுத்தப்பட்டது. அப்பல்லோவில் திடீரென அட்மிட் ஆன அஜீத்குமார் அறுவை சிகிச்சை ஒன்றை முடித்துக்கொண்டு இப்போது பைக் டூரில் இருந்து வருகிறார்.

- Advertisement -

இனி அஜீத்குமார் நடித்த விடாமுயற்சி படம் இப்போதைக்கு எடுக்கப்படாது. இனி மீண்டும் எடுக்க வாய்ப்பில்லை. போனிகபூர் தயாரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவியதால் அஜீத்குமார் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். வேட்டையன் படம் வெளியான பிறகு மீண்டும் படப்பிடிப்பு துவங்கலாம் என்றும் தகவல் கூறப்பட்டது. இதனால் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் அஜீத் படம் இல்லாமல் ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஒரு புதுதகவல் வெளியாகி உள்ளது. வரும் 10ம் தேதி மீண்டும் விடாமுயற்சி படப்பிடிப்பு துவங்குகிறது. படத்தின் டைரக்டர் மகிழ்திருமேனியை அழைத்துப் பேசிய அஜீத்குமார், வரும் ஜூன் மாதம் ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் நடிக்க போய் விடுவேன். அதன்பிறகு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்தில் நடிக்க முடியும். அதனால் ஏப்ரல், மே மாதங்களுக்குள் விடாமுயற்சி படத்தை முடித்துவிடுங்கள், இடையில் அழைத்தால் வர மாட்டேன் என்று கண்டிசனாக கூறிவிட்டார். அதனால் வரும் ஏப்ரல் 10ம் தேதி விடாமுயற்சி படப்பிடிப்பு மீண்டும் துவங்குகிறது.

- Advertisement -

சற்று முன்