- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாளத்தில் ஹிட்டான ஆவேசம் பட இயக்குனருடன் கைகோர்க்க போகிறாரா சூர்யா... என்னங்க சொல்றீங்க... ஆச்சரியத்தில் பொங்கும்...

மலையாளத்தில் ஹிட்டான ஆவேசம் பட இயக்குனருடன் கைகோர்க்க போகிறாரா சூர்யா… என்னங்க சொல்றீங்க… ஆச்சரியத்தில் பொங்கும் ரசிகர்கள்…

- Advertisement -

சூர்யா தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதி கட்ட காட்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இது ஆன்மீக கதையாக உருவாவதாக சிலர் கூறுகிறார்கள்.

ஏற்கனவே இதன் படப்பிடிப்பு பூஜை பொள்ளாச்சியில் உள்ள மாசாணியம்மன் கோவிலில்தான் நடைபெற்றது. படத்திற்கு வேட்டை கருப்பு என பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார்கள். அது மட்டுமல்ல சூர்யாவுக்கு இதில் இரண்டு கதாபாத்திரம் என்றும், ஒன்று வழக்கறிஞர் மற்றொன்று கருப்புசாமி கதாபாத்திரம் எனவும் சொல்கிறார்கள்.

- Advertisement -

படத்தில் வழக்கறிஞராக திரிசா வருகிறார். யோகி பாபு, நட்டி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். லப்பர் பந்து படத்தில் நடித்து ஃபேமஸான ஸ்வாசிகாவுக்கு இதில் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து நடிகையே ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். அதில் தனது கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது என்றும், இதற்கு முன்பு இது போன்ற ஒரு ரோலில் தான் நடித்ததில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

சூர்யாவின் 45 வது திரைப்படமாக உருவாகும் இதனை நிச்சயமாக ஒரு பண்டிகை நாளில் தான் வெளியிடுவேன் என படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கூறியிருந்தார். இந்த திரைப்படம் நிறைவடையும் தருவாயில் உள்ள சூழலில், தனது அடுத்த படத்திற்கான பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா.

- Advertisement -

இதில் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது வாடிவாசல் திரைப்படம் தான். அது குறித்த அப்டேட்டையும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பு இயக்குனர், வெங்கி அட்லூரியுடன் கைகோர்த்துள்ளார் சூர்யா. இதன் பட பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது. சூர்யாவுக்கு கதாநாயகியாக மமீதா பைஜூ நடிக்கிறார்.

இந்த மாத இறுதியில் இந்த திரைப்படத்தின் சூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சூர்யா அடுத்ததாக மலையாள இயக்குனர் ஜித்து மாதவனுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜித்து மாதவன் ஏற்கனவே பகத் பாஸிலை வைத்து ஆவேசம் என்னும் தரமான திரைப்படத்தை கொடுத்திருந்தார். இதனால் இந்த கூட்டணி மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தயாரிப்பு நிறுவனம்தான் இதனை எடுக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்