இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணி செய்தவர் ராஜகுமாரன். பிறகு நீ வருவாய் என என்ற படத்தை அவரே டைரக்ட் செய்து இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் தேவயானி பார்த்திபன் அஜீத்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது.
தொடர்ந்து ராஜகுமாரன் இயக்கிய விண்ணுக்கும் மண்ணுக்கும் படத்தில் சரத்குமார் குஷ்பு தேவயானி சியான் விக்ரம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்த படம் பிளாப் ஆகிவிட்டது. தொடர்ந்து ராஜகுமாரன் இயக்கிய காதலுடன் மற்றும் திருமதி தமிழ் ஆகிய 2 படங்களும் ஓடவில்லை.
அதன்பிறகு கடுகு வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் திருமதி தமிழ் உள்ளிட்ட சில படங்களில் ராஜகுமாரன் நடித்திருந்தார். பூவே உனக்காக சூர்யவம்சம் படங்களில் சில காட்சிகளில் நடித்திருந்தார். எனினும் நடிகராக இயக்குனராக அவர் பெரிய அளவில் பிரகாசிக்க முடியவில்லை.
ஒருகட்டத்தில் அன்றைய நட்சத்திர நாயகியாக இருந்த நடிகை தேவயானியை காதலித்து ராஜகுமாரன் திருமணம் செய்துக்கொண்டார். ராஜகுமாரன் இயக்கிய 4 படங்களிலும் தேவயானி தான் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நட்சத்திர தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் ஒருவர் திரைப்பட நடிகையாக விரைவில் அறிமுகமாக உள்ளார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ராஜகுமாரன் கூறியதாவது, கல்யாணம் ஆன பிறகு குழந்தை பெற்றுக் கொள்ளும் அப்படிங்கற எண்ணமே எனக்கு இல்லை. ஏனென்றால் இந்த மோசமான உலகத்தில் என்ன தைரியத்துல என்னை கொண்டு வந்தீங்க? நான் எப்படி போராடுவேன்? எப்படி கஷ்டப்படுவேன்? உங்களுக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லையான்னு நாளைக்கு என் பசங்க என்னைப் பார்த்து கேட்டால் என்ன பதில் சொல்றது?
சாதாரணமாக நாம வாழ்வதே எவ்வளவு பெரிய போராட்டமா இருக்கு? இதுல நான் குழந்தையை பெற்று அவங்களையும் போராட வச்சா இந்த ரெண்டு போரையும் எனக்கு பிடிக்கவே இல்லை. அதனால் நான் தேவயானி கிட்ட பசங்க வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவங்க அதை ஏத்துக்கவே இல்லை என்று இயக்குனர் ராஜகுமாரன் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





