- Advertisement -
Homeபொழுதுபோக்குவடிவேல் நடித்த அந்த காமெடி காட்சியால் பெரிய பிரச்னை ஆகி விட்டது, போலீஸ் அதிகாரிகள் எல்லாம்...

வடிவேல் நடித்த அந்த காமெடி காட்சியால் பெரிய பிரச்னை ஆகி விட்டது, போலீஸ் அதிகாரிகள் எல்லாம் நேரில் வந்துவிட்டார்கள் – இயக்குனர் சுராஜ் சொன்ன சம்பவம்!

- Advertisement -

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் கடந்த 2007ம் ஆண்டில் வெளியான படம் மருதமலை. இந்த படத்தில் ஹீரோவாக அர்ஜூன் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நிலா நடித்திருந்தார். மேலும் நாசர் வடிவேலு ராஜேஷ் மலையாள நடிகர் லால் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் போலீஸ் ஏட்டுவாக என்கவுண்டர் ஏகாம்பரம் என்ற காமெடி ரோலில் நடிகர் வடிவேலு நடித்திருந்தார். இதில் மார்கெட் காய்கறி வியாபாரிகளிடம் ரவுடிகளிடம் மாமூல் வாங்கும் ஒரு கேரக்டரில் வடிவேலு நடித்திருப்பார். ரவுடிகளிடம் அடி வாங்கிக்கொண்டு அதற்காக மாமூலும் வாங்கி விடுவது போன்ற காட்சிகளில் வடிவேலு நடித்திருந்தார்.

- Advertisement -

மேலும் ஒரு காட்சியில் பிச்சைக்காரராக போண்டா மணியும், போலீஸ் ஏட்டுவாக ஏகாம்பரமும் காய்கறி மார்க்கெட்டுக்கு போய் பணம் கேட்பார்கள். பிச்சை கேட்கும் போண்டா மணியையும், மாமூல் கேட்கும் வடிவேலுவையும் ஒரே மாதிரி காய்கறி வியாபாரி சிங்கமுத்து நடத்தி காசு கொடுப்பார்.

இந்த காட்சியில் வடிவேலு நடித்தது பெரிய பிரச்னையாகி விட்டது என்று சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய மருதமலை படத்தின் இயக்குனர் சுராஜ் கூறியிருக்கிறார். அவர் கூறியதாவது, இந்த காட்சியில் பிச்சை எடுக்கும் கேரக்டரை போலீஸ் உடன் ஒப்பிட்டு காசு கேட்பது போல காமெடி காட்சி எடுக்கப்பட்டது.

- Advertisement -

இதைப் பார்த்த போலீஸ் அதிகாரிகள் சிலர் நேராக ஆபீஸ்க்கு வந்து விட்டார்கள். பிச்சை எடுப்பதையும் போலீஸ் மாமூல் கேட்பதையும் ஒன்றாக காட்டி போலீஸ் துறையை அவமானப்படுத்தி விட்டீர்கள். எப்படி இப்படி ஒரு காட்சியை எடுக்கலாம் என்று கோபமாக பேசிவிட்டனர். அவர்களிடம், ஒரு போலீஸ் நல்லவர் என்பதால் மற்றொரு போலீஸ்சை கெட்டவராக காட்ட அப்படி காட்சி வைக்கப்பட்டது.

மற்றபடி அது படத்தில் ஒரு காமெடிக்காக மட்டுமே அந்த காட்சி எடுக்கப்பட்டது. அது ஒரு திரைப்படம்தான். மற்றபடி போலீஸ்சை குறை சொல்வது நோக்கமல்ல. காமெடியான காட்சிதான் என்று அவர்களிடம் பேசி சமாளித்து அனுப்பி வைத்தேன் என்று மருதமலை பட இயக்குனர் சுராஜ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்