நடிகர் கமல்ஹாசன் எப்போதுமே தனது படங்களுக்கு வித்யாசமான தலைப்புகளை வைக்க விரும்புவார். அந்த டைட்டிலே அந்த படத்துக்கு பெரிய ஒரு கவனத்தை பெற்றுத் தரும். அந்த வகையில் கமல்ஹாசனின் நீண்ட கால விருப்பம் இந்த முறை நிறைவேறப் போகிறது என்கிற லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது கடந்த 2004ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த படம் விருமாண்டி. இந்த படத்தில் நடிகர் கமலுடன் அபிராமி நெப்போலியன் பசுபதி ரோகிணி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருந்தார்.
மதுரையை கதைக்களமாக கொண்ட இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் சண்டியராக நடித்திருந்தார். அதனால் இந்த படத்துக்கு தலைப்பே சண்டியர் என்றுதான் வைத்திருந்தார். ஆனால் அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அந்த டைட்டிலை வைக்க முடியவில்லை. அதற்கு பிறகு விருமாண்டி என டைட்டில் மாற்றப்பட்டது.
ஆனால் கடந்த 1995ம் ஆண்டில் வர்றார் சண்டியர் என்ற படமும் 2014ம் ஆண்டில் சண்டியர் என்ற படமும் வெளியானது. ஆனால் இந்த படங்கள் வந்ததும் தெரியவில்லை. போனதும் தெரியவில்லை. ஆனால் சண்டியர் என கமல்ஹாசன் டைட்டில் வைப்பதாக தகவல் வெளியானதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அந்த தலைப்பு கைவிடப்பட்டது.
இந்த நிலையில் சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளார். மதுரை மற்றும் மதுரையை சுற்றிய கதைக்களத்தில் இந்த படம் உருவாகிறது. விருமாண்டியை போலவே இதிலும் சண்டியராக தான் கமல்ஹாசன் நடிக்க உள்ளார்.
அதனால் இந்த படத்துக்கு சண்டியர் என டைட்டில் வைக்க ஒரு திட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 23 ஆண்டுகளுக்கு முன்பு விருமாண்டி படத்தில் ஏற்பட்ட ஏமாற்றத்தை இந்த படத்துக்கு சண்டியர் என டைட்டில் வைக்க கமல் முடிவு செய்திருக்கிறார். கமல் இப்போது ஒரு கட்சியின் தலைவர், ராஜ்யசபா எம்பி என்பதால் சண்டியர் என்ற தலைப்புக்கு யாரும் இடையூறு செய்ய மாட்டார்கள் என்பதால் இந்த டைட்டிலையே கமல் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது.





