நடிகர் சூர்யா ஆரம்பத்தில் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்தவர். ஆனால் சிங்கம் 2 படத்துக்கு பிறகு கடந்த 12 ஆண்டுகளாக அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக எதுவுமே அமையவில்லை. அதாவது சூர்யா படத்தை தியேட்டர்களில் ரசிகர்கள் வரவேற்று கொண்டாடி 12 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.
கடந்தாண்டில் வெளியான ரெட்ரோ படமும் கூட வணிக ரீதியான வெற்றிப் படம் என்று அறிவிக்கப்பட்டாலும் தியேட்டர்களில் இந்த படம் பெரிய அளவில் கவனம் பெறவில்லை என்பதுதான் உண்மை. அதனால் கருப்பு படத்தின் வெற்றி பெரிய அளவில் தியேட்டர்களில் கொண்டாடப்பட வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
அதனால் கருப்பு படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரமோசன் செய்ய நடிகர் சூர்யா திட்டமிட்டுள்ளார். வருகிற 28ம் தேதி முதல் 2 வாரங்களுக்கு அதாவது படம் மே 14ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் தொடர்ந்து 2 வாரங்களுக்கு கருப்பு படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் சூர்யா பங்கேற்க உள்ளார்.
தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா கேரளா கர்நாடகா மற்றும் ஓவர்சீஸ் வெற்றிக்காக வெளிநாடுகளுக்கும் கருப்பு பட பிரமோசன்களில் அவர் கலந்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார். தனது படத்தின் அபார வெற்றிக்காக களத்தில் இறங்கும் ஆர்வத்தில் உள்ள சூர்யாவை ரசிகர்கள் பாராட்டினாலும் ஒரு விதத்தில் எச்சரிக்கவும் செய்கின்றனர்.
சூர்யா நடித்த அஞ்சான் படம் ரிலீஸான போது இப்படி ஓவர் பில்டப் செய்ததுதான் படத்தின் மாபெரும் தோல்விக்கு காரணமாக இருந்தது. அதே போல் கங்குவா படத்தின் ரிலீஸின் போதும் படம் தீ மாதிரி இருக்கும். படம் பார்க்கிறவங்க எல்லாம் வாயை பொளந்துக்கிட்டு பார்ப்பாங்க என்று சூர்யா பேசியிருந்தார்.
இப்படி தாறுமாறாக படம் குறித்து செய்யப்படும் ஓவர் பில்டப்புகள் கடைசியில் அந்த படத்துக்கே பெரிய நெகடிவ்வாக மாறி படத்துக்கு ஆப்பு வைத்து விடுகிறது. அதனால் கருப்பு படம் பிரமோசன்களின் போது படத்தை பற்றி ஓவர் பில்டப் செய்யாமல் சரியான முறையில் படம் குறித்து விளம்பரப்படுத்தினால் மட்டுமே அது படத்துக்கு பாசிட்டிவ் ஆக அமையும் என்று சூர்யா ரசிகர்கள் எச்சரிக்கின்றனர்.





