- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்கை அமரனுக்கு ஏன் இந்த வயித்தெரிச்சல்? குட் பேட் அக்லி பட பாடல்கள் விவகாரத்தில் விளாசித்...

கங்கை அமரனுக்கு ஏன் இந்த வயித்தெரிச்சல்? குட் பேட் அக்லி பட பாடல்கள் விவகாரத்தில் விளாசித் தள்ளிய பிரபல நடிகர்!

- Advertisement -

சமீபத்தில் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வெளியாகி பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றது. இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் இளையராஜா இசையமைத்த என் ஜோடி மஞ்சக்குருவி ஒத்த ரூவா தாரேன் இளமை இதோ இதோ ஆகிய பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

இதுகுறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய இசைஞானி இளையராஜாவின் தம்பி கங்கை அமரன், குட் பேட் அக்லி படத்துக்கு இசையமைத்த இசையமைப்பாளர் 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கான். ஆனால் இளையராஜா பாட்டால தான் அந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. எங்க அண்ணன் போட்ட இசையை தான் ரசிகர்கள் ரசிக்கிறாங்க, என்று கடுமையாக பேசியிருந்தார்.

- Advertisement -

மேலும் அண்ணன் இளையராஜாவுக்கு பணத்தாசை கிடையாது. எங்ககிட்ட ஏராளமான பணம் இருக்குது. எங்க உழைப்புல வந்த இசையை நீங்க எப்படி எடுத்து பயன்படுத்தலாம், எங்க சொத்தை நீங்க எப்படி பயன்படுத்தலாம். அதனால்தான் அண்ணன் நஷ்டஈடு கேட்கிறார். அண்ணன்கிட்ட ஒரு வார்த்தை முன்பே கேட்டிருந்தால் அவர் பர்மிஷன் கொடுத்திருப்பார் என்றும் கங்கை அமரன் அந்த நிகழ்ச்சியில் காரசாரமாக பேசியிருந்தார்.

சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் பிஎல் தேனப்பன். இவர் முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றிப் படங்களை தயாரித்தவர். கடந்த சில ஆண்டுகளாக சினிமாவிலும் நடித்து வருகிறார். முத்து படத்தில் மீனா, ரஜினி கேரளாவில் ஒரு சின்ன ஓட்டலில் சாப்பிடுவார்கள். அந்த காட்சியில் தேனப்பன் நடித்திருப்பார். மேலும் போர்தொழில் படத்தில் போலீஸ் ஏட்டாகவும் குரங்கு பொம்மை படத்தில் பாரதிராஜாவின் முதலாளியாகவும், சமீபத்தில் வெளியான டிராகன் படத்தில் கேஎஸ் ரவிக்குமாரின் நண்பராகவும் தேனப்பன் நடித்திருந்தார்.

- Advertisement -

ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் பிஎல் தேனப்பன் கூறியதாவது, சமீபத்தில் கங்கை அமரன் சார் ஜீவி பிரகாஷ் 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். ஆனால் இளையராஜா பாடல்களைதான் பயன்படுத்துறீங்கன்னு பேசியிருந்தார். ஜீவி பிரகாஷூக்கு இசையமைக்க தெரியாது என்கிற மாதிரி அவர் பேசி இருந்தார்.

ஜிவி பிரகாஷ் அவ்வளவு தங்கமான மனுஷன். அவர் 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது கங்கை அமரனுக்கு வயிற்றெரிச்சலான்னு தெரியல. எத்தனையோ பிரச்னைகளில் ஜீவி பிரகாஷ் விட்டுக் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் கூட ஒரு படம் ரிலீஸாக தன் சம்பளத்தை விட்டுக் கொடுத்தார். குட் பேட் அக்லி படத்துல ராஜா சார் பாடலை யூஸ் பண்ணியது ஜீவி பிரகாஷின் தவறு கிடையாது .அது அந்த படத்தின் இயக்குனரின் விருப்பம் என்று தயாரிப்பாளர் தேனப்பன் கடுமையாக பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்