தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்களை கொடுப்பதில் கெட்டிக்காரர் இயக்குனர் ஹரி. அவரது இயக்கத்தில் வெளிவந்த மசாலா திரைப்படங்கள் பெரும்பாலானவை மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளன. சாமி, தாமிரபரணி, சிங்கம் என அவர் வெற்றி திரைப்படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அது மட்டுமல்ல தயாரிப்பாளர்களுக்கு தகுந்த ஒரு இயக்குனராகவும் ஹரி இருந்து வருகிறார். சொன்ன தேதியில் படத்தை முடிப்பது, கூறிய பட்ஜெட்டை விட தாண்டாமல் படத்தை எடுப்பது போன்ற காரணங்களால் திரைத்துறையில் அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது.
தற்போது இயக்குனர் ஹரி விஷால் உடன் மூன்றாம் முறையாக இணைந்து படம் எடுத்து வருகிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான தாமிரபரணி மற்றும் பூஜை ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் தற்போது ரத்னம் எனும் படத்தை அவர் இயக்கியிருக்கிறார்.
அனேகமாக இந்த திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார். இந்த நிலையில், இயக்குனர் ஹரி அடுத்ததாக சூர்யாவுடன் இணையப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், அடுத்ததாக சூர்யாவுடன் இணைய வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சூர்யாவும் இதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக இயக்குனர் ஹரி தெரிவித்து இருக்கிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இப்படியான சூழலில் அடுத்ததாக இருவரும் சிங்கம் படத்தில் நான்காம் பாகத்தில்தான் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வதேச அளவில் இந்த திரைப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இல்லையென்றால் வேறொரு கதையில் இந்த கூட்டணி மீண்டும் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா ஹரி கூட்டணி மீண்டும் இணைவதில் ரசிகர்கள் சந்தோசப்பட்டாலும், அது சிங்கம் படத்தின் நான்காம் பாகமாக இருக்கக் கூடாது என்று வேண்டுவதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.





