- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா பிரமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டுக்கு செல்கிறார் சூர்யா... ஆனால் அதிலும் ஒரு சின்ன ட்விஸ்ட்...

கங்குவா பிரமோஷனுக்காக பிக் பாஸ் வீட்டுக்கு செல்கிறார் சூர்யா… ஆனால் அதிலும் ஒரு சின்ன ட்விஸ்ட் இருக்கு… போடு தகிட தகிட…

- Advertisement -

கங்குவா திரைப்படம் வரும் 14ஆம் தேதி வெளியாகும் சூழலில் அதற்கான பிரமோஷன் பணிகளில் சூர்யா தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக, மும்பை டெல்லி ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் சூர்யா கலந்து கொண்டார்.

 

- Advertisement -

இதில் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் போது சூர்யா ரசிகர்கள் முன்பு கண்கலங்கினார். இரண்டு வருடங்களாக நான் படமே கொடுக்கவில்லை. ஆனால் என்னுடைய சூர்யா சன் ஆப் கிருஷ்ணன் ( இங்கு வாரணமாயிரம் ) திரைப்படம் ரீரிலிஸ் ஆகும்போது நீங்கள் கொண்டாடினீர்கள். இந்த அன்பு என்னை கலங்கடிக்க செய்திருக்கிறது என்று பேசினார்.

 

- Advertisement -

சூர்யாவின் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. தொடர்ந்து கங்குவா படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் சூர்யா உள்பட படக் குழுவினர் பலரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

 

தற்காலத்திற்கும் 1500 ஆண்டுகளுக்கு முன்னால் இருக்கும் காலத்திற்கும்  இடையே உள்ள தொடர்புதான் கங்குவா திரைப்படத்தின் ஒற்றைக் கதைக்களம். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் பாலிவுட் நடிகை திஷா பதானி. யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, நட்டி உள்ளிட்டோரும் இடம்பெற்று இருக்கிறார்கள்.

 

இதில் வில்லனாக பாபிதியோல் நடித்திருக்கிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் கங்குவா, 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது.

 

இப்படியான சூழலில் தான் படத்தின் ப்ரோமோஷனலுக்காக பிக் பாஸ் வீட்டிற்கு செல்கிறார் சூர்யா. ஆனால் அது தமிழ்நாட்டில் அல்ல ஆந்திராவில். தெலுங்கில் நடிகர் நாகர்ஜுனா தொகுப்பாளராக பங்கேற்று வரும் பிக் பாஸ் இல்லத்திற்கு தான், சூர்யா சென்று இருக்கிறார். இந்தத் தகவல் சூர்யா ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

 

- Advertisement -

சற்று முன்