- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த 3 நாட்கள் யாரையும் உள்ளே விடாதீங்க - தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர்...

அந்த 3 நாட்கள் யாரையும் உள்ளே விடாதீங்க – தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் நடிகர் விஷால் வைத்த திடீர் வேண்டுகோள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்தவர் நடிகர் விஷால். விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் சொந்தமாக படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். அத்துடன் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வரும் நடிகர் விஷாலுக்கு வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி, நடிகை சாய் தன்ஷிகாவுடன் திருமணம் நடக்க உள்ளது.

நடிகர் விஷால் நடித்த படங்களில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தது. அதைத் தொடர்ந்து வெளியான ஹரி இயக்கத்தில் வெளியான ரத்னம் படம் போதிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் 12 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான சுந்தர் சி இயக்கிய மதகத ராஜா படம் மிகப்பெரிய வெற்றியை விஷாலுக்கு பெற்றுத் தந்தது.

- Advertisement -

ஆனால் அதற்கு பின் நடிகர் விஷால் இப்போதுதான் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். நடிகர் சங்க கட்டிடப் பணிகள் மற்றும் வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி அவரது திருமணம் என பிஸியாக இருந்ததால் கடந்த 2 ஆண்டுகளாக அவர் நடிப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை. மேலும் துப்பறிவாளன் 2 படத்தை அவரே தயாரித்து இயக்கவும் முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் விக்னேஷ் நடித்த ரெட் பிளவர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டார். அந்த விழாவில் நடிகர் விஷால் பேசியதாவது, இனிவரும் காலங்களில் ஒரு படம் வெளியாகும் போது முதல் 12 காட்சிகள் அதாவது முதல் 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் பப்ளிக் ரிவ்யூ என்ற பெயரில் பேட்டி எடுக்க யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

- Advertisement -

தியேட்டர் அதிபர்கள் விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களுக்கு இதை ஒரு முக்கிய வேண்டுகோளாக வைக்கிறேன். தேவைப்பட்டால் தியேட்டருக்கு வெளியே ரிவ்யூ எடுத்துக் கொள்ளட்டும். அல்லது சம்பந்தப்பட்டவர்கள் படம் பார்த்து அவர்களை சொந்தமாக ரிவ்யூ கொடுக்கட்டும். சினிமாவை காப்பாற்ற இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும்.

இன்னும் 2 மாதங்களில் என் திருமணம் நடக்கும். நடிகர் சங்க வளாகம் அதற்குள் தயாராகிவிடும். ஆகஸ்ட் 29ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளேன். நடிகர் சங்க கட்டட பணிகளை முடிக்க ஓடிக்கொண்டு இருக்கிறேன். இந்த படத்தின் ஹீரோ விக்னேஷ் கடும் உழைப்பாளி. அவர் வெற்றி பெற வேண்டும் என்று அந்த விழாவில் நடிகர் விஷால் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்