தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி. தனது அனுபவமிக்க நடிப்பினாலும், அவ்வபோது கொடுக்கும் வெற்றி படங்களினாலும் அவர் தமிழ் சினிமாவில் இன்று வரை தாக்குப் பிடித்திருக்கிறார். தனது அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் அவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றியை ருசித்தன.
அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். மன்னருக்கே ஒன்றான மடுக்கான தோற்றத்துடன் முதிர்ச்சியான நடிப்பை வெளிகாட்டி, பாராட்டைப் பெற்றிருந்தார் ஜெயம் ரவி. ஆனால் சமீப காலமாக அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் பலவும் தோல்வியை சந்தித்து வருகின்றன.
ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் இறைவன் உள்ளிட்ட திரைப்படங்கள் இங்கு பலருக்கு வந்தது கூட தெரியாது என்று கூறலாம். அவர் நடிப்பில் வெளியாகி இருந்த சைரன் திரைப்படம் ஓரளவு விமர்சனத்தை பெற்றது. தொடர்ந்து தற்போது அவர் பிரதர், ஜீனி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படி அவரது திரையுலக பயணம் ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க திடீரென தனது இல்ல வாழ்க்கையில் மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்தார். தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தியை ஜெயம் ரவி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இப்படியான சூழலில் தான் திடீரென அவர் தனது மண முறிவை அறிவித்தார். ஆனால் ஆர்த்தி எழுதிய கடிதத்தில், ஜெயம் ரவியின் அறிவிப்பு தனது கவனத்தில் வராமல் எடுக்கப்பட்டது என்று கூறி அதிர்ச்சியூட்டினார். இப்படியான சூழலில் மனைவியை பிரிந்ததற்கான காரணத்தை அடுக்கி இருக்கிறார் நடிகர் ஜெயம் ரவி.
அதில் மனைவியின் டார்ச்சர் தாங்க முடியாமல் தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக நடிகர் கூறி இருக்கிறார். தனக்கென்ன சொந்தமாக ஒரு தனியான வங்கி கணக்கு கூட கிடையாது என்று கூறியிருக்கும் அவர், தான் ஏடிஎம்மில் எடுக்கும் பணம் ஆர்த்தியின் செல்போனிற்கு மெசேஜ் ஆக சென்று விடும் என்றும் அவர் ஒவ்வொன்றுக்கும் தன்னிடம் கேள்வி கேட்டதும் அல்லாமல் உதவியாளிடமும் கேள்வி எழுப்பியதாக வருத்தம் தெரிவித்துள்ளார். ஆர்த்தி வீட்டில் ஒரு சிலருக்கு கிடைக்கும் மரியாதை கூட தனக்கு கிடைக்கவில்லை என்றும் ஜெயம் ரவி பேசி இருக்கிறார். ஆர்த்தி வீட்டிற்கும் தனது கார் மற்றும் உடைமைகளை பெற்றுத் தர வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். நடிகரின் இந்த பேட்டி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதேசமயம் ஜெயம் ரவி பேசியது குறித்து அவர் மனைவி ஆர்த்தி எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.





