- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்க்கு பயந்து நேருக்கு நேர் போட்டியிடுவதை தவிர்த்து வருகிறாரா சூர்யா... எல்லாம் அந்த அறிவு படத்தின்...

விஜய்க்கு பயந்து நேருக்கு நேர் போட்டியிடுவதை தவிர்த்து வருகிறாரா சூர்யா… எல்லாம் அந்த அறிவு படத்தின் தாக்கம்தான் எனக் கூறும் சினிமா விமர்சகர்கள்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களை கணக்கெடுத்துப் பார்த்தால், அதில் முதலாவதாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் வருவார்கள். இதில் அஜித் விஜய் சூர்யா ஆகியோருக்கு 90 மற்றும் 2 ஆயிரம் ஆண்டுகள் மிக முக்கியமான காலகட்டம் என்று கூறலாம்.

அந்த சமயத்தில் விஜய், அஜித், சூர்யா ஆகியோர் வெற்றிக்காக போராடினார்கள். இதில் சூர்யா நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தில் முதல் விஜய் மற்றும் அஜித் இருவரும் சேர்ந்து நடித்தனர். ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அஜித் அந்த திரைப்படத்திலிருந்து விலக, சூர்யா விஜய்யுடன் நடித்தார்.

- Advertisement -

இருவரும் போட்டி போட்டு நடித்த அந்த திரைப்படம், வெற்றி பெற்றது. இதன் பிறகு மீண்டும் விஜய் சூர்யா கூட்டணியில் பிரண்ட்ஸ் திரைப்படம் உருவானது. அதிலும் சூர்யா துணை நடிகராகவே நடித்திருந்தார். இதன் பிறகு தனக்கான வழியை தேர்ந்தெடுத்துக் கொண்ட சூர்யா, கடும் உழைப்பின் மூலம் முக்கிய நடிகர்கள் பட்டியலில் இணைந்தார்.

அவரது ஆரம்ப காலத்தில் வெளியான மௌனம் பேசியதே, நந்தா, உன்னை நினைத்து, காக்க காக்க உள்ளிட்ட திரைப்படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்று சூர்யாவுக்கான இருப்பை கொடுத்தன. இதனிடையே சூர்யா ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் வெளியான கஜினி திரைப்படம், பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடைந்து வசூலில் சாதனை படைத்தது.

- Advertisement -

இந்த கூட்டணி மீண்டும் இணைந்து ஏழாம் அறிவு திரைப்படத்தை உருவாக்கியது. 2011 ஆம் ஆண்டு தீபாவளி சமயம் இந்த திரைப்படம் வெளியாக, விஜய்யின் வேலாயுதமும் ரேஸில் இருந்தது. ஆனால் அப்போது விஜய் படத்தை விட ஏழாம் அறிவு திரைப்படத்திற்கே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. சூர்யாவின் இரண்டு கதாபாத்திரங்கள், அதிலும் போதி தர்மன் குறித்த வரலாறு என பல்வேறு விஷயங்கள் அதில் இருந்ததால் பலரும் படத்தை எதிர்பார்த்தனர்.

மேலும் ஏழாம் அறிவை தயாரித்த உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம், படத்திற்கான ப்ரமோசனை வேறு லெவலில் செய்தது. இதனால் ஏழாம் அறிவு அந்த சமயம் வெற்றி பெறும் என பலரும் ஆருடம் கூறினர். விஜயின் இடத்தை சூர்யா பிடித்து விட்டதாகவும் ஒரு பேச்சு அடிபட்டது.

ஆனால் அத்தனை கணிப்பும் பொய்யாகும்படி, வேலாயுதம் திரைப்படமே வெற்றி பெற்றது. இது குறித்து பேசிய சினிமா விமர்சகர்கள், இரண்டு படங்களும் ரிலீஸ் ஆன சமயத்தில் முதல் மூன்று நாட்கள் அனைவருமே ஏழாம் அறிவு திரைப்படத்திற்குதான் சென்றார்கள். படம் நன்றாக இருந்தாலும், அந்த திரைக்கதையின் போக்கு நமது மக்களுக்கு கனெக்ட் ஆகவில்லை. இதன் காரணமாகவே வேலாயுதம் திரைப்படத்திற்கு மக்கள் செல்ல ஆரம்பித்ததால், அது ஹிட் அடித்தது. தான் அஜித் விஜய் ஆகியோருக்கு இணையான நடிகர் இல்லை என்பதை உணர்ந்து சூர்யா, அன்று முதல் இருவருடனும் போட்டி போடுவதை தவிர்த்து விட்டு வருகிறார் என்று தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்